முகப்பு /செய்தி /உலகம் / நேருக்கு நேர் மோதிக்கொண்ட ரயில்கள்... நொறுங்கிய பெட்டிகள்... கோர விபத்தில் 32 பேர் பலி..!

நேருக்கு நேர் மோதிக்கொண்ட ரயில்கள்... நொறுங்கிய பெட்டிகள்... கோர விபத்தில் 32 பேர் பலி..!

ரயில் விபத்து

ரயில் விபத்து

கிரீஸ் நாட்டில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32ஆக உயர்ந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • INTER, IndiaGreece

ஏதேன்சில் இருந்து தெஸ்ஸாலொனிகி (thessaloniki) நகருக்கு 350 பயணிகளுடன் ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. லரிசா (Larissa ) அருகே தெம்பி ( Tempi) என்ற இடத்தில் எதிரே வந்த சரக்கு ரயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.

2 ரயில்களும் நேருக்கு நேர் மோதியதில், பயணிகள் சென்ற ரயிலில் சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். 85 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற மீட்புக்குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 150 க்கும் அதிகமான வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 194 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழு தெரிவித்துள்ளது.

First published:

Tags: Train Accident