Home /News /international /

பிரிட்டன் அரசராக முடி சூடி கொண்டுள்ள மூன்றாம் சார்லஸ் - அதிகாரங்கள் என்ன?

பிரிட்டன் அரசராக முடி சூடி கொண்டுள்ள மூன்றாம் சார்லஸ் - அதிகாரங்கள் என்ன?

மூன்றாம் சார்லஸ்

மூன்றாம் சார்லஸ்

56 சுதந்திர நாடுகள் மற்றும் 240 கோடி மக்களைக் கொண்ட காமன்வெல்த் அமைப்பின் தலைவராக அரசர் இருப்பார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Internationa, IndiaEngland
    பிரிட்டன் அரசராக முடி சூடி கொண்டுள்ள மூன்றாம் சார்லசின் அதிகாரங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

     

    பிரிட்டனில் ராணி அல்லது அரசர் நாட்டின் தலைவராக இருப்பினும் அவர்களது அதிகாரங்கள் வெறும் சம்பிரதாயம் மட்டுமே. அரசியல் ரீதியாக அவர்கள் நடுநிலை மட்டுமே வகிக்க முடியும். அரசிடமிருந்து முக்கியமான கையொப்பம் தேவைப்படும் ஆவணங்கள், கடிதங்கள், கூட்டங்களுக்கான விளக்கங்கள் உள்ளிட்டவை சிவப்பு தோல் பெட்டியில் வைக்கப்பட்டு அரசரிடம் அளிக்கப்படும். அதில் அவர் கையொப்பம் இடுவார்.

    வழக்கமாக புதன்கிழமைகளில் அரசரை நாட்டின் பிரதமர் பக்கிங்ஹாம் அரண்மனையில் சந்தித்து நாட்டு நடப்புகள் குறித்து விளக்கம் அளிப்பார். இந்த சந்திப்புகள் குறித்து எந்த தகவல்களும் வெளியிடப்படமாட்டாது.

    பொதுத் தேர்தலில் வெற்றிபெறும் கட்சியின் தலைவர் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அழைக்கப்படுவார். அப்போது அரசர் அவரிடம் முறையாக அரசாங்கத்தை அமைப்பதற்கான அழைப்பு விடுப்பார். பொதுத் தேர்தலுக்கு முன், முறையாக அரசைக் கலைக்கும் பணியையும் அரசர் மேற்கொள்வார்.

    ஆண்டின் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தை அரசர் தொடங்கி வைப்பார். பிரபுக்கள் அவையின் சிம்மாசனத்தில் அமர்ந்து அரசின் எதிர்கால திட்டங்களை அறிவிப்பார். சட்டம் வடிவம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு, அது சட்டமாக மாறுவதற்கு அரசரால் முறையாக ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்.

    Also Read:  பிரிட்டன் ராணி மணிமகுடத்தை அலங்கரித்த கோஹினூர் வைரம் இந்தியா திரும்புமா?

    இவை தவிர நாட்டுக்கு வருகை தரும் பிற நாட்டுத் தலைவர்களுக்கு அரசர் விருந்தளிப்பார். பிரிட்டனில் உள்ள வெளிநாட்டுத் தூதர்கள், தூதரக உயர் ஆணையர்களை அரசர் சந்திப்பார். நவம்பர் மாதம் 2- ஆம் தேதி லண்டனில் உள்ள ராணி விக்டோரியா தேவாலயத்தில் நடைபெறும் வருடாந்திர நினைவு நிகழ்வுக்கு அரசர் தலைமை தாங்குவார்.

    56 சுதந்திர நாடுகள் மற்றும் 240 கோடி மக்களைக் கொண்ட காமன்வெல்த் அமைப்பின் தலைவராக அரசர் இருப்பார். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட 14 நாடுகளுக்கு அவர் தலைவராகவும் உள்ளார். பிரிட்டனில் அரச வாரிசு உரிமை என்பது எந்த உறுப்பினர் அந்தப் பதவியில் நியமிக்கப்பட வேண்டும் என்பதை வரையறுக்கிறது. அரசர் அல்லது ராணியின் முதல் குழந்தை இந்த வரிசையில் முதலாவதாக இருப்பார்.

    2013-ஆம் ஆண்டில் அரச குடும்ப வாரிசு உரிமை விதிகள் திருத்தப்பட்டன. அதன்படி ஆண்களுக்கும் பெண்களுக்கும் வாரிசு உரிமையில் சமவாய்ப்பு வழங்கப்பட்டது. அதாவது மகன்களுக்கு அவர்களுடைய மூத்த சகோதரிகளைவிட முன்னுரிமை கிடைக்காது.

    மன்னர் சார்ல்ஸின் மூத்த மகனான இளவரசர் வில்லியம்ஸ்-சுக்கு கான்வால் கோமகன் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இளவரசர் வில்லியமின் மூத்த குழந்தையான இளவரசர் ஜார்ஜ் அரியணைக்கான வாரிசு உரிமை வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார். மூத்த மகள் இளவரசி சார்லோட் மூன்றாவது இடத்தில் உள்ளார். வில்லியம்சின் இளைய மகன் லூயிஸ், வாரிசு உரிமையில் நான்காவது இடத்தில் உள்ளார்.

     
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Queen Elizabeth

    அடுத்த செய்தி