Home /News /international /

வடகொரியாவில் அதிகரிக்கும் கொரோனா... ஆச்சரியமும், அச்சத்தையும் ஏற்படுத்தும் பராம்பரிய சிகிச்சை முறைகள்

வடகொரியாவில் அதிகரிக்கும் கொரோனா... ஆச்சரியமும், அச்சத்தையும் ஏற்படுத்தும் பராம்பரிய சிகிச்சை முறைகள்

வடகொரியா

வடகொரியா

கொரோனாவிற்கான தடுப்பூசி செலுத்தப்படாத வட கொரியாவில், அதிகரித்துள்ள தொற்று பரவலை கட்டுப்படுத்த பாரம்பரிய சிகிச்சை முறைகள் வழங்கப்பட்டு வருவது, ஆச்சரியத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    2020ம் ஆண்டு கொரோனா பரவ தொடங்கியதுமே,  எல்லைகளை முழுமையாக அடைத்து உலக நாடுகளிடம் இருந்து முற்றிலும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டது  வடகொரியா. அந்நாட்டிற்கு சீனா லட்சக்கணக்கான தடுப்பூசிகளை வழங்கிய போது, தங்கள் நாட்டில் தொற்று பாதிப்பே இல்லை எனவும், அதனை தேவைப்படுவோருக்கு வழங்குங்கள் என்றும் கூறி, தடுப்பூசிகளை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் திருப்பி அனுப்பினார்.

    இதனால், அந்நாட்டில் ஒருவருக்கும் கொரோனா தடுப்பூசி என்பதே செலுத்தப்படவில்லை.இந்நிலையில், தொற்று பரவ தொடங்கிய இரண்டரை ஆண்டுகளில் முதன் முறையாக ஒருவருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கடந்த வாரம் வடகொரிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்த எண்ணிக்கை தற்போது 20 லட்சத்தை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தொற்று பரவலை தடுக்க கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன், சாதாரண காய்ச்சலுக்கு வழங்கப்படும், பாரம்பரிய சிகிச்சை முறைகள் அங்கு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

    Also Read : வடகொரியாவில் ஒரே வாரத்தில் 20 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு..!

    அதன்படி, தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் காலை மற்றும் மாலையில் உப்பு நீரில் வாய் கொப்பளிக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர். இது வாய் வழியாக வைரஸ் பரவுவதை தடுக்கும் என நம்பப்படுகிறது. இதற்காக உப்புக் கரைசலை தயாரிக்க ஆயிரம் டன் உப்பு தலைநகர் பியோங்யாங்கிற்கு அனுப்பப்பட்டு உள்ளது. உடலில் நீரின் அளவை அதிகரிக்க சூடான பானங்களை பருகவும், உடல் வலியை குறைக்க இஞ்சி மற்றும் வேப்பிலை நீரை அருந்தவும் பரிந்துரைக்கப்படுகிறது.

    காய்ச்சல், தலைவலி, தொண்டை வறட்சி உள்ளிட்ட தொற்றுக்கான அறிகுறிகளை தணிக்கும்,  ibuprofen, amoxicillin உள்ளிட்ட வலி நிவாரணிகளை பயன்படுத்தவும், தொற்றாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பிட்ட சிகிச்சை முறைகள் தொற்றை குணப்படுத்தும் என எந்த ஆதாரங்களும் இல்லை என, மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். தொற்றுக்கு சிகிச்சை அளிக்க தேவையான, மருத்துவ உட்கட்டமைப்புகளும் வடகொரியாவில் இல்லை என கூறப்படுகிறது. சீனா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் உதவ தயாராக இருப்பதாக கூறினாலும்,
    Published by:Vijay R
    First published:

    Tags: North korea

    அடுத்த செய்தி