வர்த்தகத்தில் இரு நாடுகளுக்கிடையே சுமூக உறவு இல்லை! மோடியைச் சந்தித்த பிறகு ட்ரம்ப் அதிருப்தி

ராணுவம் உட்பட பல துறைகளில் இந்தியா-அமெரிக்க ஒன்றிணைந்து செயல்படுகிறது எனக் குறிப்பிட்ட டிரம்ப், வர்த்தகத்தில் இருநாடுகளுக்கு இடையே சுமூகமான உடன்பாடு ஏற்படவில்லை என்றும் கவலை தெரிவித்தார்.

Web Desk | news18
Updated: June 28, 2019, 10:38 AM IST
வர்த்தகத்தில் இரு நாடுகளுக்கிடையே சுமூக உறவு இல்லை! மோடியைச் சந்தித்த பிறகு ட்ரம்ப் அதிருப்தி
டிரம்ப்பை சந்தித்தார் பிரதமர் மோடி
Web Desk | news18
Updated: June 28, 2019, 10:38 AM IST
ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பைச் சந்தித்து பேசினார்.

ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி-20 நாடுகளின் உச்சிமாநாடு இன்று முதல் 2 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று காலை ஜப்பான் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்து பேசினார்.

இந்நிலையில், அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று காலை நடைபெற்றது. அப்போது உட்கட்டமைப்பு, அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்டவற்றில் 3 நாடுகள் இணைந்து செயல்படுவது குறித்து பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகிய 3 பேர் ஆலோசனை நடத்தினர்.


இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பிரதமர் மோடி தனியாக சந்தித்து பேசினார். அப்போது நடந்த பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் மோடியின் மகத்தான தேர்தல் வெற்றிக்கு டிரம்ப் வாழ்த்து தெரிவித்து கைகுலுக்கினார். இந்த வெற்றிக்குத் தகுதியானவர்தான் நீங்கள் என்று மோடியிடம் டிரம்ப் தெரிவித்தார்.

இந்த பேச்சுவார்த்தையில் 4 முக்கியமான விஷயங்கள் பேசப்பட்டன. அதில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துவது, பாதுகாப்பை பலப்படுத்துவது, ஈரான் மீதான பொருளாதாரத் தடை மற்றும் 5ஜி சேவைக்கு சீனாவின் ஹூவேய் நிறுவன தொழில்நுட்ப பயன்பாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ராணுவம் உட்பட பல துறைகளில் இந்தியா-அமெரிக்க ஒன்றிணைந்து செயல்படுகிறது எனக் குறிப்பிட்ட டிரம்ப், வர்த்தகத்தில் இரு நாடுகளுக்கு இடையே சுமூகமான உடன்பாடு ஏற்படவில்லை என்றும் கவலை தெரிவித்தார்.

Loading...

Also see... கண்களுக்கு விருந்தளித்த ட்ரோன் கண்காட்சி!

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...