ஸ்டீவ் ஜாப்ஸ் கையெழுத்திட்ட திரைப்பட போஸ்டர்! 22 லட்சம் ரூபாய்க்கு ஏலம்

டாய் ஸ்டோரி திரைப்படம் டிஸ்னி உடையது. அன்றைய காலகட்டத்தில் டிஸ்னி போர்டு உறுப்பினராக ஸ்டீவ் ஜாப்ஸ் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Web Desk | news18
Updated: August 31, 2019, 6:51 PM IST
ஸ்டீவ் ஜாப்ஸ் கையெழுத்திட்ட திரைப்பட போஸ்டர்! 22 லட்சம் ரூபாய்க்கு ஏலம்
டாய் ஸ்டோரி 4 (மாதிரிப்படம்)
Web Desk | news18
Updated: August 31, 2019, 6:51 PM IST
பிரபல அனிமேஷன் திரைப்படமான ‘டாய் ஸ்டோரி’ திரைப்படத்தின் போஸ்டர் ஒன்று இந்திய மதிப்பில் சுமார் 22 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

பிக்சர் அனிமேஷன் ஸ்டூடியோ சார்பில் 1995-ம் ஆண்டு ‘டாய் ஸ்டோரி’ படம் வெளியானது. இத்திரைப்படத்தின் போஸ்டர் ஒன்றில் மறைந்த ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் கையெழுத்திட்டுள்ளார். இதனாலே, இந்த ஒரு போஸ்டர் மட்டும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ஒரு ஏலத்தில் சுமார் 22 லட்சம் ரூபாய்க்கு எடுக்கப்பட்டது.

ஸ்டீவ் ஜாப்ஸ் கையெழுத்திட்ட ‘டாய் ஸ்டோரி’ போஸ்டரின் ஏல தொடக்க விலை 6 ஆயிரம் அமெரிக்க டாலர்களாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ஏலம் 31,250 அமெரிக்க டாலர்களுக்கு (சுமார் 22 லட்சம் ரூபாய்) எடுக்கப்பட்டுள்ளது. இது முதன்முறை அல்ல என்கின்றனர் ஏலம் அறிவித்த நேட் சாண்டர்ஸ் நிறுவனத்தார்.


காரணம், கடந்த 2017-ம் ஆண்டில் 1992-ம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ் கையெழுத்திட்ட இதே போன்றதொரு போஸ்டர் சான் பிரான்சிஸ்கோ ஏலத்தில் 19,640 அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ்-க்கு உரிய பெருமையாகவே இந்நிகழ்வு கருதப்படுகிறது.

டாய் ஸ்டோரி திரைப்படம் டிஸ்னி உடையது. அன்றைய காலகட்டத்தில் டிஸ்னி போர்டு உறுப்பினராக ஸ்டீவ் ஜாப்ஸ் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

மேலும் பார்க்க: ₹420 பீர்-க்கு ₹87,000 பணத்தை இழந்த பெண்... கூகுள் பே மூலம் மோசடி!
First published: August 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...