பாரீஸில் மர்ம நபர் வெறிச்செயல்: கத்தியால் தாக்கியதில் 7 பேர் படுகாயம்

news18
Updated: September 10, 2018, 10:44 AM IST
பாரீஸில் மர்ம நபர் வெறிச்செயல்: கத்தியால் தாக்கியதில் 7 பேர் படுகாயம்
news18
Updated: September 10, 2018, 10:44 AM IST

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்கியதில், இங்கிலாந்தைச் சேர்ந்த 2 சுற்றுலா பயணிகள் உட்பட 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் மர்மநபர் ஒருவர் இரவு 11 மணியளவில் தெருவில் சென்ற வழிபோக்கர்களை திடீரென தாக்கியுள்ளார். எதிர்ப்பாராத இந்த தாக்குதலால் மக்கள் பீதியடைந்தனர். 11 இன்ஞ் நீளமுள்ள கத்தியால் தாக்குவதைக் கண்ட பொதுமக்கள் 20 பேர், மெட்டல் பந்துகளை அவனது தலையை நோக்கி வீசி அவனது வெறிச்செயலை அடக்க முற்பட்டனர். அந்த மர்ம நபர் தாக்கியதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். அதில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. காவல்துறையினர் அவரை கைது செய்து கொலை முயற்சி வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலை நடத்திய நபர் ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அகதியாக வந்தவர் என்று தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல் நடத்தியவனிடமிருந்து கத்தியுடன் இரும்பு கம்பியையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


இந்த தாக்குதல் தீவிரவாத நோக்கத்துடன் நடத்தப்படவில்லை, தெருவில் வழிப்போக்கர்களை தாக்குவதுதான் நோக்கமாக இருந்துள்ளது.  தாக்குதலை நடத்தியவன் மனநிலை பாதிக்கப்பட்டவரா என்ற கோணத்திலுல் விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். கடந்த சில மாதங்களில் பாரீஸில் கத்தியால் தாக்கும் சம்பவம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

First published: September 10, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...