இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்: இந்தியாவில் எப்போது தொடங்குகிறது?

ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சிகள் வழியே கிரகணத்தை கண்டு ரசிக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சிகள் வழியே கிரகணத்தை கண்டு ரசிக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
2019-ம் ஆண்டின் முழு சூரிய கிரகணம் இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 10:24 மணிக்கு  கிரகணம் தொடங்குகிறது.

சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய 3-ம் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது கிரகணங்கள் எனும் அரிய நிகழ்வு வானில் நடைபெறுகிறது. சூரிய கிரகணம் என்பது, சூரியனின் ஒளிக்கதிர்களை சந்திரன் மறைக்கும் அரிய நிகழ்வே ஆகும். அத்தகைய அரிய நிகழ்வானது இன்று நிகழ்கிறது.

சிலி நாட்டில் லா செரீனா எனும் இடத்தில், அந்நாட்டு நேரப்படி மதியம் 3:22 மணிக்கு தொடங்கி, மாலை 5:46 மணி வரை இந்த கிரகணம் நீள்கிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 10: 24 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை  2:14 மணிக்கு முழுமையடைகிறது.

மொத்தமாக 4 நிமிடங்கள் 33 வினாடிகளுக்கு மட்டுமே முழுமையான சூரிய கிரகணம் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் நிகழவிருக்கும் முதல் சூரிய கிரகணமும் இதுவே.

இரவாக இருப்பதால் வானில் நிகழும் இந்த அரிய அதிசயத்தை, இந்திய மக்களால் காண இயலாது. சிலி, அர்ஜென்டினா மற்றும் தென்பசிபிக் பெருங்கடல் அருகில் உள்ள பகுதிகளில் சூரிய கிரகணத்தை தெளிவாக காணமுடியும்.

இதனால் தெற்கு பசிபிக் நாடுகள் சில மணி நேரங்களுக்கு இருளில் மூழ்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சிகள் வழியே கிரகணத்தை கண்டு ரசிக்கவும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க... குறைந்து வரும் சாத்தனூர் அணையின் நீர்மட்டம்

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Published by:Vaijayanthi S
First published: