Home /News /international /

சீனாவில் கடும் வெள்ள பாதிப்பு - 15 பேர் பலி, அவசர நிலை பிறப்பித்து அரசு உத்தரவு

சீனாவில் கடும் வெள்ள பாதிப்பு - 15 பேர் பலி, அவசர நிலை பிறப்பித்து அரசு உத்தரவு

தெற்கு சீனாவில் வெள்ள பாதிப்பு (மாதிரிப் படம்)

தெற்கு சீனாவில் வெள்ள பாதிப்பு (மாதிரிப் படம்)

வெள்ளம் பாதித்த பகுதிகளில் 4ஆம் கட்ட அவசர நிலை பிறப்பித்து சீன அரசு உத்தரவிட்டுள்ளது.

    சீனாவின் தெற்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட புயல் வெள்ள பாதிப்பால் ஆயிரக்கணக்கான மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த வெள்ள பாதிப்பு காரணமாக இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த புயலானாது யுன்னான், புஜியான் ஆகிய மாகாணங்களை வெகுவாக பாதித்துள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் 4ஆம் கட்ட அவசர நிலை பிறப்பித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

    சீனாவின் கிழக்கு கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள புஜியான் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக இரு கட்டடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், யுன்னான் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பிராந்தியம் சீனாவின் தென் மேற்கு பகுதியில் உள்ளது. சின்ஜெங் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி மூன்று குழந்தைகள் வெள்ளத்திலேயே அடித்து செல்லப்பட்டனர். இதில் இரு குழந்தைகள் பலியான நிலையில், ஒன்று தப்பி பிழைத்தது.

    இந்த உயிரிழப்புகளுடன் மாபெரும் பொருள் சேதமும் தெற்கு சீனாவில் ஏற்பட்டுள்ளது. புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கில் லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் நீரில் மூழ்கி சேதமாகியுள்ளது. அத்துடன் நூற்றுக்கணக்கிலான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த பாதிப்பினால் அங்கு போக்குவரத்து, தொலைத்தொடர்பு, மின் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், புயல் காரணமாக மீன்பிடி தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நூற்றுக்கணக்கான மீன்பிடி படகுகளும் கடலில் அடித்து செல்லப்பட்டன. மழை, வெள்ள பாதிப்பை சீரமைக்கும் பணிகளில் பேரிடர் மேலாண்மை குழுவினர் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர். இதுவரை, 1,500க்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: இது வெறும் ட்ரைலர்தான்.. மங்கிபாக்ஸ் வைரஸ் குறித்து WHO புதிய எச்சரிக்கை

    சீனாவில் இது போன்ற புயல் வெள்ள பாதிப்பு அடிக்கடி ஏற்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. சீனாவின் குவாங்கி பிராந்தியத்தில் இரு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். 3,800 ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் சேதமடைந்தன.
    Published by:Kannan V
    First published:

    Tags: China, Flood, Flood alert

    அடுத்த செய்தி