Home /News /international /

ராணி எலிசபெத் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் புகழ் அஞ்சலி

ராணி எலிசபெத் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் புகழ் அஞ்சலி

எலிசபெத் ராணி மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல்

எலிசபெத் ராணி மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல்

ராணியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டன் பிரதமர் லிஸ் டிராஸ், அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை, முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா உள்ளிட்ட உலக தலைவர்கள் அஞ்சலி தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • inter, IndiaLondonLondon
    பிரிட்டன் மகாராணி எலிசபெத்துக்கு உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். 96 வயதான பிரிட்டன் மகாராணி எலிசபெத், ஸ்கார்ட்லாந்தில் உள்ள பால்மாரல் அரண்மனையில் தங்கியிருந்த போது திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் தொடர் சிசிச்சை அளித்த நிலையில், கவலைக்கிடமாக இருந்த ராணி சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளார்.

    70 ஆண்டு காலம் இங்கிலாந்தை ஆண்ட எலிசபெத் அந்நாட்டு வரலாற்றில் அதிக ஆண்டுகள் ஆண்ட ராணி என்ற பெருமையைப் பெற்றவர். ராணியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டன் பிரதமர் லிஸ் டிராஸ், அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை, முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, ஐநா பொதுசெயலாளர் ஆன்டோனியோகுவாட்ரெஸ், இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னட் உள்ளிட்ட உலக தலைவர்கள் இரங்கல் மற்றும் புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

    பிரதமர் மோடி தனது ட்விட்டர் செய்தியில், ராணி எலிசபெத் உடனான தனது சந்திப்புகளை நினைவு கூர்ந்துள்ளார். "2015 மற்றும் 201 ஆகிய ஆண்டுகளில் பக்கிங்காம் அரண்மனையில் ராணியுடனான சந்திப்பை மறக்க முடியாது. இந்த சந்திப்பின் போது வரலாற்று பெக்கிஷமான அன்னல் காந்தி பயன்படுத்திய கைக்குட்டையை எனக்கு காண்பித்து வரலாற்றை அன்புடன் நினைவு கூர்ந்தார்" என பிரதமர் மோடி இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.


    புதிதாக பொறுப்பேற்ற பிரிட்டன் பிரதமர் லிஸ் டிராஸ் தனது இரங்கல் செய்தியில், நவீன பிரிட்டனை கட்டி எழுப்பியதில் முன்னணி பங்கு எலிசபெத் ராணிக்கு உள்ளது. இவரின் ஆட்சி காலத்தில் நாடு வளர்ந்து நலன் பெற்று உலகின் சிறந்த தேசமாக உள்ளது என்றுள்ளார். அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை தனது இரங்கல் குறிப்பில், பிரிட்டன் அரச குடும்பம் மற்றும் மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல். பிரிட்டன் நாட்டுடன் எங்கள் உறவு வலுவானது. ராணியின் மறைவு குறித்து அதிபர் ஜோ பைடன் இரங்கல் உரையாற்றவுள்ளார் எனத் தெரிவித்துள்ளது.

    அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா தனது இரங்கல் செய்தியில், தன்னையும் தனது மனைவி மிச்சல் ஒபாமாவையும் மிகுந்த அன்புடன் வரவேற்று விருந்தோம்பல் செய்தவர் எலிசபெத் ராணி. அவருடன் செலவிட்ட நேரத்தை மறக்கவே முடியாது எனக் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: ராணி எலிசபெத்தின் 70 ஆண்டு ஆட்சி காலத்தில் நடைபெற்ற முக்கிய வரலாற்று நிகழ்வுகள்

    ஐநா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குவாட்ரெஸ் தனது அறிக்கையில், "பிரிட்டன் நாட்டில் நீண்ட காலம் ஆட்சி புரிந்த ராணி எலிசபெத் நியூ யார்க்கில் உள்ள ஐநா தலைமையிடத்திற்கு இரு முறை வருகை தந்துள்ளார். காலநிலை மாற்றம் பிரச்னை, பின்தங்கிய நாடுகளின் முன்னேற்றம் ஆகியவற்றின் மீது தொடர் கவனம் செலுத்தி அதற்கான பங்களிப்பை மேற்கொண்டவர்" என இரங்கல் செய்தியில் பாராட்டியுள்ளார்.

    அதேபோல், இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னட், பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் மேக்ரான், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோரும் ராணியின் மறைவுக்கு இரங்கல் மற்றும் அஞ்சலி குறிப்பு வெளியிட்டுள்ளனர்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Britain, PM Modi, Queen Elizabeth

    அடுத்த செய்தி