தெற்கு ஜப்பான் ககோஷிமாவில் உள்ள சகுராஜிமா எரிமலை ஞாயிறு இரவு 8 மணிக்கு வெடித்தது. இந்த எரிமலை வெடிப்பு காரணமாக, ஜப்பானின் தேசிய வானிலை நிறுவனம் அதன் உயர்மட்ட எச்சரிக்கையை விடுத்துள்ளது.
சனி மற்றும் ஞாயிறு மதியம் இடையே எரிமலையில் நான்கு பெரிய வெடிப்புகள் நிகழ்ந்து , அதன் சீற்றம் 1,200 மீட்டர் உயரம் வரை சென்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வெடிப்பு ஏற்பட்ட மலையின் உச்சியில் சுமார் 2.5 கிலோமீட்டர் அளவிற்கு கிரேட்டர் எனப்படும் முகப்பு பள்ளம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் (ஜேஎம்ஏ) அறிவித்துள்ளது. அதே நேரத்தில் எரிமலை உமிழ்ந்த புகை, சுமார் 300 மீட்டரை எட்டி மேகங்களுடன் கலந்துள்ளது.
தெற்கு ஜப்பான் பகுதியின் முக்கிய சுற்றுலாத்தலமாக இருந்த இந்த எரிமலை வெடிப்பிற்கு பிறகு எரிமலை அடிக்கடி புகை மற்றும் சாம்பலை வெளியேற்றி வருகிறது. அந்த எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை என்று துணை தலைமை அமைச்சரவை செயலாளர் யோஷிஹிகோ இசோசாகி தெரிவித்தார். மேலும், பிரதம மந்திரி ஃபுமியோ கிஷிடா, "எரிமலை தீப்பிழம்பு வெளியேற்றங்களால் ஏற்படும் சேதங்களைத் தடுப்பதை உறுதிசெய்ய உள்ளூர் நகராட்சியுடன் இணைந்து பணியாற்றுமாறு" அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.
இங்கிலாந்தில் சுட்டெரிக்கும் சூரியன்.. வெப்பத்தால் தார் சாலைகள் உருகின
சகுராஜிமா எரிமலை தீப்பிழம்பு, புகை வெளியேற்றத்தின் காரணமாக அப்பகுதிக்கான அபாய எச்சரிக்கையை ஐந்தாவது நிலைக்கு உயர்த்தியுள்ளது. முன்னதாக இது மூன்றாம் நிலையில் இருந்தது. அதோடு மலைக்கு அருகில் உள்ள பகுதிகளில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
ககோஷிமா நகரத்தின்படி, இரண்டு நகரங்களிலும் 77 குடியிருப்பாளர்கள் உள்ளனர். அவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.பசிபிக் "ரிங் ஆஃப் ஃபயர்" என்று அழைக்கப்படும் இடத்தில் ஜப்பான் அமர்ந்திருக்கிறது, அதனால் ஏராளமான ஆக்ட்டிவ் எரிமலைகள் இப்பகுதியில் உள்ளன. உலகின் பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளின் அதிக எண்ணிக்கை இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சகுராஜிமா முன்பு ஒரு தீவாக இருந்தது, ஆனால் முந்தைய வெடிப்புகள் காரணமாக விரிவடைந்து இப்போது ஜப்பான் தீபகற்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஜப்பான் கடைசியாக 2015 இல் ககோஷிமாவில் உள்ள குச்சினோராபு வெடித்தபோது அபாய எச்சரிக்கையை வெளியிட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.