பயணிகளை சீக்கிரம் வரவைக்க ஜப்பான் மெட்ரோ புது யுக்தி...!

பொதுப்போக்குவரத்து முறையில் முன்னிலையில் உள்ள ஜப்பான் நாட்டில் மெட்ரோ ரயில் போக்குவரத்து முக்கிய இடத்தில் உள்ளது. தினமும் சராசரியாக 75 லட்சம் பேர் மெட்ரோவை பயன்படுத்துகின்றனர்.

பயணிகளை சீக்கிரம் வரவைக்க ஜப்பான் மெட்ரோ புது யுக்தி...!
ஜப்பான் மெட்ரோ ரயில் நிலையம் (image: AFP)
  • News18
  • Last Updated: January 24, 2019, 8:37 AM IST
  • Share this:
ஜப்பான் நாட்டில் மெட்ரோ ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த சீக்கிரம் வரும் பயணிகளுக்கு காலை உணவை இலவசமாக வழங்க நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

பொதுப்போக்குவரத்து முறையில் முன்னிலையில் உள்ள ஜப்பான் நாட்டில் மெட்ரோ ரயில் போக்குவரத்து முக்கிய இடத்தில் உள்ளது. தினமும் சராசரியாக 75 லட்சம் பேர் மெட்ரோவை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக காலை நேரங்களில் ரயிலிலும் சரி, ரயில் நிலையத்திலும் சரி கூட்டம் அலை மோதும்.

ரயில் கதவுகள் மூட முடியாமல் இருக்கும் வரை பயணிகள் ரயிலில் நிற்பார்கள். அவர்களை உள்ளே தள்ளுவதற்கென தனியாக பணியாளர்கள் இருக்கின்றனர் என்றால் கூட்டத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள். இந்நிலையில், இந்த கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் புதிய முறையை கையாள ரயில் போக்குவரத்து நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.


ஜப்பான் ரயில் கூட்ட நெரிசல்


அதன் படி, குறிப்பிட்ட நேரத்தில் இந்த கூட்டம் இருப்பதால் அந்த நேரத்துக்கு முன்னதாக கிளம்பும் ரயில்களை மக்கள் பயன்படுத்த வைப்பதற்காக இலவச காலை உணவு என்ற யுக்தி கையில் எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நேரத்திற்கு முந்தைய ரயில்களில் கணிசமான பயணிகள் சென்றால், பிந்தய ரயில்களில் கூட்டத்தை குறைக்க முடியும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர். இதன்படி, சீக்கிரம் புறப்படும் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது. 2000 முதல் 3000 பயணிகள் வரை தினம் தோறும் காலை உணவு அளிக்கப்பட உள்ளது.டோசாய் - டோக்கியோ ரயிலில் இந்த முறை முதலில் அமல்படுத்தப்படுகிறது. பின்னர், மற்ற பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

Also See..

First published: January 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்