ஹோம் /நியூஸ் /உலகம் /

தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு அங்கீகாரம்… ஜப்பானின் டோக்கியோ நகரம் முடிவு

தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு அங்கீகாரம்… ஜப்பானின் டோக்கியோ நகரம் முடிவு

தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு அங்கீகாரம்

தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு அங்கீகாரம்

இணைந்து வாழும் தன்பாலின ஈர்ப்பாளர்களை சில நிபந்தனைகளுடன் திருமணமான தம்பதியராக அங்கீகரிக்க டோக்கியோ நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • inter, Indiajapan

  இணைந்து வாழும் தன்பாலின ஈர்ப்பாளர்களை சில நிபந்தனைகளுடன் திருமணமான தம்பதியராக அங்கீகரிக்க டோக்கியோ நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

  ஜப்பான் நாட்டில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் இணைந்து வாழ்வதை அந்நாட்டு அரசு அங்கீகரிக்கவில்லை. இருந்தாலும் அரசிடம் அங்கீகாரம் கேட்டு அங்கு வாழும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். சில சமூக குழுக்கள் தன்பாலின ஈர்ப்பாளர்களின் உறவை ஏற்றுக்கொண்டாலும், பெரும்பான்மை சமூகம் அவர்களை அங்கீகரிக்கவில்லை. இதனால் பொதுவெளிகளில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறார்கள்.

  குறிப்பாக பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவது, மருத்துவ வசதிகளை பெறுதல் போன்ற இயல்பான முறைகளுக்கே தன்பாலின ஈர்ப்பாளர்கள் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். எனவே தங்களின் உறவை அங்கீகரிக்க வேண்டும் என்ற அவர்கள் சார்பில் கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இணைந்து வாழும் தன்பாலின ஈர்ப்பாளர்களை ஒரு சில நிபந்தனைகளுடன் தம்பதியராக அங்கீகரித்து அவர்களுக்கு சான்றிதழ் வழங்க டோக்கியோ நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

  Read More : சரசரவென கூடிய கூட்டம்.. மூச்சுவிடக்கூட முடியல... தென் கொரியா நெரிசலில் சிக்கி 150 பேர் பலி!

  வீடுவசதி பெறுதல், மருத்துவம் மற்றும் அரசின் நலத்திட்டங்களை பெறுதல் உள்ளிட்ட வசதிகளுக்காக தன்பாலின ஈர்ப்பாளர்களை தம்பதியராக அங்கீகரித்து சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதனால் நீண்ட காலமாக சிரமங்களை சந்தித்து வரும் தாங்கள் இனி நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்கான நம்பிக்கை பிறந்திருக்கிறது என்கிறார்கள் தன்பாலின ஈர்ப்பாளர்கள்.

  முதன்முதலாக டோக்கிய நகர நிர்வாகத்திற்கு உட்பட்ட ஷிபுயா மாவட்ட நிர்வாகம் கடந்த 2015ஆம் ஆண்டு தன்பாலின ஈர்ப்பாளர்களை அங்கீகரித்திருந்தது. தற்போது டோக்கியோ நகர நிர்வாகமும் இந்த முடிவை எடுத்திருப்பது மாற்றத்திற்கான தொடக்கம் என தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்கள் தன்பாலின ஈர்ப்பாளர்கள்.

  ஜப்பானில் குடும்ப பாரம்பரியங்களுக்கு மிகவும் மதிப்பளிக்கும், பழமைவாத அரசு நடைமுறையில் இருந்தாலும், அண்மைக்காலமாக பாலின முரண்பாடுகள் மீதான அதன் அனுகுமுறை சற்று இளகியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஓரின சேர்க்கையாளர்களின் திருமணம்  மற்றும் உறவு தொடர்பான ஒரு ஆய்வு ஜப்பானில் மேற்கொள்ளப்பட்டது.

  அந்த ஆய்வின் முடிவில் 57 விழுக்காடு பொதுமக்கள் தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்த ஆதரவு மனநிலையில் இருந்தது தெரியவந்துள்ளது. 37 விழுக்காடு மக்கள் மட்டுமே எதிர்ப்பு மனநிலையில் இருந்துள்ளனர். தன்பாலின சேர்க்கையாளர்கள் அங்கீகரிக்கப்படாததற்கு காரணம் ஜப்பான் நாட்டின் அரசமைப்புச் சட்டம் தான் கடந்த ஜூன் மாதம் ஒசாக நீதிமன்றம் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தது. அப்படி பழமையை போற்றும் மனநிலையே தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காததற்கு காரணம் என்கிறார்கள் தன்பாலின ஈர்ப்பாளர்கள். ஆனால் டோக்கியோ நகர நிர்வாகத்தின் முடிவு பெரிய முடிவுக்கான ஆரம்பம் என நம்பிக்கையும் தெரிவிக்கிறார்கள்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Homosex, Tokyo