மழலை மொழியில் சிறுமி ஒருவர் அத்தையை வழியனுப்ப பாதுகாப்பு அதிகாரிகளிடம் அனுமதி கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாக வருகிறது.
கத்தார் ஹமாத் சர்வதே விமான நிலையத்தில் அத்தையை வழியனுப்பு பாதுகாப்பு அதிகாரியிடம் அனுமதி கேட்கும் சிறுமியின் செயலை ஒருவர் வீடியோவாக எடுத்து ட்விட்டரில் பதிவிட காட்டுத்தீயாக பரவிக்கொண்டிருக்கிறது சிறுமியின் க்யூட் வீடியோ.விமான நிலையங்களில் பிரிவின் வலியால் அரங்கேறும் கண்ணீர் காட்சிகளுக்கு மத்தியில் அன்பின் மிகுந்தியில் அத்தையை கட்டியணைத்து வழியனுப்பிய சிறுமியின் வீடியோதான் கடந்த சில நாள்களாக ட்ரெண்டிங்கில் உள்ளது.
விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை வீரர்களிடம் சிவப்பு நிற ஆடை அணிந்த சிறுமி தனது மழலை மொழியில் அத்தை வழியனுப்ப அனுமதி வேண்டும் எனக் கேட்கிறார். பாதுகாப்பு அதிகாரிகள் சிறுமிக்கு க்ரீன் சிக்னல் கொடுக்க அங்கிருந்து தனது அத்தையை நோக்கி செல்கிறார். இதனை கவனித்த சிறுமியின் அத்தை ஓடி வந்து சிறுமியை கட்டியணைத்துக்கொண்டார். இதனை அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் தூரத்தில் இருந்துப் பார்த்துக்கொண்டிருந்தார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த ஒருவர் படம்பிடித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அக்டோபர் 14-ம் தேதி இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்குகள் மற்றும் கமெண்ட்கள் குவிந்துள்ளது. நிறைய ட்விட்டர் யூஸர்கள் அந்த குழந்தையை பாராட்டியுள்ளன. ஒரு யூஸர் தனது கமெண்டில், மனிதர்கள் வளராமல் இருந்திருந்தால் இந்த உலகம் எவ்வளவு அழகாக இருந்திருக்கும். குழந்தைகள் மிகவும் தூய்மையானவர்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.