ஹோம் /நியூஸ் /உலகம் /

'போருக்கான காலகட்டம் அல்ல'.. பிரதமர் மோடியின் ஜி20 விசிட்டில் நடந்த முக்கிய விஷயங்கள்!

'போருக்கான காலகட்டம் அல்ல'.. பிரதமர் மோடியின் ஜி20 விசிட்டில் நடந்த முக்கிய விஷயங்கள்!

ஜி 20 மாநாடு

ஜி 20 மாநாடு

உக்ரைன் - ரஷ்யா போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர ஜி20 தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இன்றைய காலகட்டம் போருக்கானது அல்ல என்று பிரதமர் மோடி கூறிய சொற்கள், ஜி20 பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • inter, IndiarussiaRussiaRussiaRussiaRussia

  ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு இந்தோனேஷியாவின் பாலி நகரில் 2-வது நாளாக நடைபெற்றது. இந்த மாநாட்டின் 3-வது அமர்வு டிஜிட்டல் டிரான்ஸ்பர்மேஷன் என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில், ஜி20 நாடுகளின் தலைவர்கள் இணைந்து உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை கண்டித்து அறிக்கை வெளியிட்டனர். பெரும்பாலான உறுப்பினர்கள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யாவை கடுமையாகக் கண்டித்தனர்.

  மேலும் இது மிகப்பெரிய மனித துன்பத்தை ஏற்படுத்துவதாகவும், உலகப் பொருளாதாரத்தில் இருக்கும் பலவீனங்களை மேலும் அதிகரிப்பதாகவும் கவலை தெரிவித்தனர். பணவீக்கம் அதிகரிப்பு, விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்தல், ஆற்றல் மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் நிதி ஸ்திரத்தன்மை அபாயங்கள் உயர்ந்திருப்பதாகவும் உலக தலைவர்கள் அதில் குறிப்பிட்டிருந்தனர்.

  உக்ரைனில் அமைதி மற்றும் போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதேநிலை தொடர்ந்தால், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பில் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் அதில் அடிக்கோடிட்டு காட்டியுள்ளனர். குறிப்பாக கடந்த செப்டம்பர் மாதம் ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி கூறிய "இன்றைய காலகட்டம் போருக்கானது அல்ல" என்ற சொற்கள், ஜி20 அறிக்கையில் இடம்பெற்றிருந்தது.

  சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்த வேண்டும் என்றும், அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அச்சுறுத்தல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Also see... சீனாவில் மீண்டும் தீவிரமெடுக்கும் கொரோனா பரவல்? - உலக நாடுகள் கடும் அதிர்ச்சி!

  முன்னதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்தியா- இங்கிலாந்து இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துவது குறித்து விவாதித்ததாக பிரதமர் மோடி தனது டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

  இதனிடையே பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், ஜெர்மன் chancellor ஸ்கோல்ஸ் மற்றும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலானியையும் சந்தித்து பிரதமர் மோடி பேசினார்.

  ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பனீஸ் உடனும் பிரதமர் மோடி கலந்துரையாடினார். ஜி20 நிறைவு விழா உரையில் பேசிய பிரதமர் மோடி, டிஜிட்டல் தொழில்நுட்பங்களை முறையாக பயன்படுத்துவதால் வறுமையை ஒழிக்கமுடியும் என்றார். அடுத்த 10 ஆண்டுகளில், ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் டிஜிட்டல் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்றும், உலகில் எந்த நபரும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் நன்மைகளை இழக்கக் கூடாது என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

  ஜி20 மாநாட்டின் முக்கிய அம்சமாக பெண்கள் முன்னேற்றம் இருக்கவேண்டும் என்றும், அமைதி மற்றும் பாதுகாப்பு இல்லாமல், வருங்காலத்தில் பொருளாதார முன்னேற்றம் இருக்காது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

  Also see... 3D பிரிண்டிங்கில் வளர்க்கப்பட்ட மூக்கு.. கேன்சர் நோயாளி முகத்தில் பொருத்திய பிரான்ஸ் மருத்துவர்கள் !

  இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டின் முடிவில், அக்கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தார். டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக இந்தியா தலைமை பொறுப்பை ஏற்கும். ஜி 20 நாடுகளின் தலைமை பொறுப்பை ஏற்பது, ஒவ்வொரு இந்தியரின் பெருமை என பிரதமர் மோடி கூறியுள்ளார். இதையடுத்து தனது 2 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: G20 Summit, Modi, Russia, Russia - Ukraine, War