இன்று பக்ரீத் பண்டிகை: உலக தலைவர்கள் வாழ்த்து!

இன்று பக்ரீத் பண்டிகை

நாடு முழுவதும் உற்சாகத்துடன் பக்ரீத் கொண்டாட்டம்

  • News18
  • Last Updated :
  • Share this:
தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

இஸ்லாமியர்களின் இறைதூதர் இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா முழுதும் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படும் வேளையில் பல்வேறு நாடுகளில் நேற்றே கொண்டாடப்பட்டது.

ரஷ்யா

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள கேதட்ரல் மசூதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். மசூதிக்கு வெளியேயும் ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று பிரார்த்தித்தனர். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு அதிபர் விலாடிமிர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிரியா

சிரியா தலைநகர் டமாஸ்கஸில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் அதிபர் பஷீர் அசாத் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டார். இதில், அந்நாட்டு பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் அதிபர் அஷ்ரப் கனி பங்கேற்றார். தொழுகைக்கு பிறகு ஒருவருக்கு ஒருவர் ஆரத்தழுவி வாழ்த்துக்களை பரிமாரிக் கொண்டனர். பக்ரீத்தை முன்னிட்டு ஆடுகள் விற்பனை களைகட்டியது.

இந்தோனேசியா

இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இந்தோனேசியாவில் பக்ரீத் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஜகர்தாவில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பெண்கள் உட்பட 5 ,000-க்கும் மேற்பட்டோர் தொழுகையில் ஈடுபட்டனர். இதேபோன்று பேகாஷி, திபோக் உள்ளிட்ட நகரங்களில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஏராளமானோர் தொழுகையில் ஈடுபட்டனர்.
Also see...  அ.தி.மு.கவை கடுமையாக சாடிய ப.சிதம்பரம்!

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Published by:Vaijayanthi S
First published: