உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பல உலக நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. ரஷ்யாவின் போர் மீது கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், ஒரு சில நாடுகள் தங்களுடைய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை ரஷ்யாவில் துண்டித்துள்ளன. உதாரணமாக, ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்கள், டெக்னாலஜி சேவை நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் ரஷ்யாவுடனான வணிகத்தை துண்டித்துள்ளது.
பெரு நிறுவனங்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருவதோடு மட்டுமின்றி, பொதுமக்களும் தங்கள் மனித நேயத்தை வெளிப்படுத்தியுள்ளனர். Airbnb 1 லட்சம் உக்ரைன் வாசிகளுக்கு பாதுகாப்பான வசிக்கும் இடத்தை இலவசமாக அளிப்பதாக செய்தி வெளியிட்டது.
போரால் சிதைந்து கொண்டிருக்கும் உக்ரைன் மக்களுக்கு எவ்வாறு உதவி செய்வது என்று பலரும் யோசித்து வந்தனர். Airbnb வெளியிட்ட அறிவிப்பைக் கண்டவுடன், உலகெங்கிலும் உள்ளவர்கள், Airbnb க்கு பணம் செலுத்தி அறைகளை வாடகைக்கு பதிவு செய்து வருகின்றனர். Airbnb க்கு செலுத்தப்படும் பணம், உக்ரைனில் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் மக்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கத்தில், பலரும் செயல்பட்டு வருகின்றனர்.
ALSO READ | உக்ரைன் ரஷ்யா இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் - சவுதி அரேபிய இளவரசர்
உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஆன்லைனிலையே ஏர்பிஎன்பி ரென்டல் புக் செய்து விடலாம் என்பதால் இணையத்தில் ட்ரெண்டாகிவிட்டது. உக்ரைன் நாட்டு மக்களுக்கு உதவ, பலரும் தங்களுடைய ஏர்பிஎன்பி புக்கிங் விவரங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள்.
உக்ரைனில் Airbnbயை வாடகைக்கு எடுப்பது பற்றி ஒரு டிவிட்டர் யூசர் “உக்ரைனுக்கு எப்படி பணம் அனுப்புவது என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, மற்றொருவரின் இந்த யோசனையை நானும் பயன்படுத்தினேன். அங்கு கட்டிடங்கள் இருக்கிறதா இல்லையா என்பது பற்றி பிரச்சனை இல்லை. ஆனால், என்னால் முடிந்த உதவியை செய்ய முடியும்” என்று தெரிவித்திருந்தார்.
அதேபோல கீவ் நகரில் ஒரு தம்பதிகள் மார்ச் 3 – 10 ஆம் தேதி வரை ஏர்பிஎன்பி புக் செய்திருக்கிறார்கள். அந்த புக்கிங் செய்த விபரங்களை ட்விட்டரில் “நானும் என் மனைவியும் உங்களுடைய அப்பார்ட்மென்ட்டை ஒரு வாரத்திற்கு புக் செய்து இருக்கிறோம். நாங்கள் அங்கு வரமாட்டோம். இந்த நெருக்கடியான நேரத்தில் உங்களுக்கு இது உதவியாக இருக்கும்” என்று ட்விட் செய்திருக்கின்றனர்.
ALSO READ | வொர்க் ஃப்ரம் ஹோம்-க்கு குட்பை.. ஊழியர்களை ஆபீஸ்-க்கு அழைக்கும் கூகுள்
இவ்வாறு ஏர்பிஎன்பி வழியாக முன்பதிவு செய்வது, உக்ரைனில் பொருளாதார ரீதியாகவும் பணமில்லாமலும் நெருக்கடியான சூழ்நிலையில் இருக்கும் மக்களுக்கு நேரடியாக அவர்கள் கையிலேயே பணம் கொடுப்பது போல உதவும்.
உலகில் மனிதநேயம் இன்னும் மிச்சம் இருக்கிறது என்பதற்கு இது மிகப்பெரிய உதாரணமாக இருக்கிறது. உக்ரைனுக்கு உதவுவதைத் தவிர, Airbnb தனது சேவைகளை ரஷ்யாவிலும் தொடர்ந்து நிறுத்தி வைத்துள்ளது. உக்ரைன் மீதான அதன் தாக்குதலைத் தொடர்ந்து, ரஷ்ய நாட்டில் தங்கள் சேவைகளுக்கு தற்காலிக நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம், ரஷ்ய நாட்டிற்கு சேவைகள் மற்றும் ஆதரவை மறுக்கும் பட்டியலில் Airbnb யும் இணைந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.