பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை அரசு தனது வருவாயை உயர்த்தும் நோக்கில் வாட் வரி, வருமான வரி உள்ளிட்டவற்றை உயர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளது. இம்மாதம் புதிதாக பொறுப்பேற்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அந்நாட்டின் நிதி அமைச்சர் பொறுப்பையும் ஏற்றுள்ளார். சில வாரங்களில் அவர் நாட்டின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்த வரி உயர்வு உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.
இலங்கையில் மே மாதத்தில் பண வீக்கம் வரலாறு காணாத வகையில் 39.1% உயர்ந்துள்ளது. இதனால், பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் விதமாக இந்த வரி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, மதிப்பு கூட்டு வரி 8 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும்,தொலைத் தொடர்பு வரி 11.25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு ஆண்டுக்கு 30 லட்சத்தில் இருந்து 18 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. பெரு நிறுவன வரி 24 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று கார்கள், இருசக்கர வாகன டயர்களுக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரி 50 விழுக்காடு அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஏசி, வாஷிங்மிஷின், குக்கர், பிரிட்ஜ், செல்போன் போன்றவற்றிற்கான இறக்குமதி வரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த வரி உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும், இதன்மூலம் அரசுக்கு ரூ.1,395 கோடி அளவுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் நடுத்தர மற்றும் நீண்ட கால பொருளாதார வளர்ச்சி நோக்கங்களை நிறைவேற்றுவதில் வரி உயர்வை செயல்படுத்துவது அவசியம் என்று பிரதமர் அலுவலகம் விளக்கமளித்துள்ளது.
கோவிட் லாக்டவுன் இரண்டு ஆண்டுகளாக இலங்கையின் பொருளாதாரம் கடும் இழப்பை சந்தித்தது. அந்நாட்டின் வருவாய் சுற்றுலாவை பெரிதும் நம்பியிருந்ததால் தீவிர வருவாய் பற்றாக்குறையை சந்தித்தது. அதன் காரணமாக அந்நாட்டின் விலைவாசி உயர்வு விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்து அது உள்நாட்டு அரசியல் குழப்பமாக உருவெடுத்தது. ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக மக்கள் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்து அது கலவரமாக மாறியது.
இதையும் படிங்க: உடைகளை விற்றாவது மக்களுக்கு குறைந்த விலையில் கோதுமை தருவேன் - பாகிஸ்தான் பிரதமர் அதிரடி
இதைத் தொடர்ந்து பிரதமர் பதவில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகி, புதிய பிரதமராக மீண்டும் ரணில் பொறுப்பேற்றார். நிதித்துறை பொறுப்பையும் ரணில் கையில் எடுத்துள்ள நிலையில்,பொருளாதார சீரமைப்பு பணிகளை அந்நாட்டு அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.