• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • நாடாளுமன்றத்தில் ராஜபக்சே-வுக்கு எதிராக வாக்களிப்போம்: தமிழ் தேசிய கூட்டமைப்பு

நாடாளுமன்றத்தில் ராஜபக்சே-வுக்கு எதிராக வாக்களிப்போம்: தமிழ் தேசிய கூட்டமைப்பு

ராஜபக்ச

ராஜபக்ச

  • News18
  • Last Updated :
  • Share this:
    இலங்கையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது, மஹிந்த ராஜபக்சே தலைமையிலான அரசுக்கு எதிராக வாக்களிக்க உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

    இலங்கையில் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கே-வை நீக்கிவிட்டு, புதிய பிரதமராக மஹிந்தா ராஜபக்சே-வை அதிபர் சிறிசேனா நியமித்துள்ளார். இதனால், அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தை வரும் 7-ம் தேதி கூட்ட அதிபர் ஒப்புதல் அளித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். ராஜபக்சே-வுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருமாறு 119 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கடிதம், சபாநாயகரிடம் நேற்று வழங்கப்பட்டது. ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி., வியாழேந்திரனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் பதவியையும், லஞ்சத்தையும் கொடுத்து எம்.பி.க்களின் ஆதரவைப் பெறும் ராஜபக்சே-வின் முயற்சிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சராக பொறுப்பேற்றுள்ள வியாழேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராஜபக்சே-வுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பின்போது, தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்போம் என்றும், இந்த சூழலில் நடுநிலை வகிப்பது என்பது ஜனநாயக விரோத செயல் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: