போர் குற்றச்சாட்டுகளில் இருந்து இலங்கை அரசு தப்ப முடியாது - தமிழ் தேசிய கூட்டமைப்பு

ராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் நிலை என்ன எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி கேள்வி எழுப்பினார்.

news18
Updated: March 28, 2019, 3:47 PM IST
போர் குற்றச்சாட்டுகளில் இருந்து இலங்கை அரசு தப்ப முடியாது - தமிழ் தேசிய கூட்டமைப்பு
இலங்கை நாடாளுமன்றம்
news18
Updated: March 28, 2019, 3:47 PM IST
இறுதிக்கட்ட போர் குற்றச்சாட்டுக்களிலிருந்து அரசாங்கம்  தப்பித்துக்கொள்ள முடியாது என்று இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தில், காணாமல் போனவர்கள் பற்றிய தகவலை அறிவிக்க முடியாமல் சிறிசேனா அரசு தப்ப முடியாது என, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய சேனாதிராஜா, இறுதிக்கட்டப் போரில், ராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் நிலை என்ன என கேள்வி எழுப்பினார்.

ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் வவுனியா முகாமில் தங்க வைக்கப்பட்டதாகவும், அவர்களின் பெயர்களை, முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச, தன்னிடம் வழங்கியதாகவும் சேனாதிராஜா கூறினார்.

வவுனியா முகாமிற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வதற்கு முயற்சித்த போது, ராணுவத்தினர் அனுமதிக்கவில்லை எனவும் சேனாதிராஜா குற்றம்சாட்டினார்.

Also See....

First published: March 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...