லண்டன் சென்றடைந்தார் முதல்வர் பழனிசாமி! தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து பேச்சு நடத்துகிறார்

லண்டன் கிங்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் தனது கிளைகளை தொடங்குவதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது.

லண்டன் கிங்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் தனது கிளைகளை தொடங்குவதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
14 நாட்கள் வெளிநாட்டுப் பயணத்தின் முதல்கட்டமாக முதலமைச்சர் பழனிசாமி லண்டன் சென்றடைந்துள்ளார். 

மூன்று நாடுகளுக்கு அரசு முறைப்பயணமாக புறப்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதற்கட்டாக துபாய் வழியாக லண்டன் சென்றடைந்தார். தாஜ் ஓட்டலில் தங்கியுள்ள அவர், இன்று சுகாதாரத்துறை தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுடன் ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடுகிறார்.

அதன்படி சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தினரை சந்தித்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இங்கிலாந்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணித் தரத்தின் மேம்பாடுகளை தமிழகத்தில் செயல்படுத்த இந்த ஒப்பந்தம் செய்யப்படுகிறது.

பின்பு இங்கிலாந்தில் செயல்படுத்தப்படும் அவசர ஊர்தி சேவையை பார்வையிடுகிறார். மலேரியா உள்ளிட்ட தொற்று நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை கட்டுப்படுத்துவது, நோய்களை கையாளும் வழிமுறைகள் உள்ளிட்டவற்றை தமிழகத்தில் செயல்படுத்த அறிக்கை ஒன்றில் கையெழுத்திடும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

லண்டன் கிங்ஸ் மருத்துவமனை செல்லும் முதலமைச்சர், அதன் கிளைகளை தமிழகத்தில் நிறுவ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து, அசோக் லேலண்ட் தலைவர் இந்துஜா உள்ளிட்ட தொழில் முதலீட்டாளர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசுகிறார்.

Also see... விஜய்க்கு எதிராக களத்தில் குதிக்கும் கார்த்தி!
Published by:Vaijayanthi S
First published: