முகப்பு /செய்தி /உலகம் / ’டைம்ஸ் ஸ்கொயர்’ புத்தாண்டுக் கொண்டாட்டம்: பத்திரிகையாளர்களை கவுரவிக்கும் நியூயார்க்

’டைம்ஸ் ஸ்கொயர்’ புத்தாண்டுக் கொண்டாட்டம்: பத்திரிகையாளர்களை கவுரவிக்கும் நியூயார்க்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

பத்திரிகைச் சுதந்திரத்தைக் கொண்டாடத் தயாராகி வருகிறது நியூயார்க் நகரம்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

சர்வதேச அளவில் புகழ்பெற்ற ‘டைம்ஸ் ஸ்கொயர்’ புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் இந்த ஆண்டு ‘பத்திரிகைச் சுதந்திரம்’ முன் வைக்கப்படுகிறது.

அமெரிக்காவில் ஆண்டுதோறும் நியூயார்க்கின் ‘டைம்ஸ் ஸ்கொயர்’ பகுதியில் கொண்டாடப்படும் புத்தாண்டு மிகவும் பிரசித்திப் பெற்றது.  2019-ம் ஆண்டுக்கான கொண்டாட்டத்தில் ‘பத்திரிகைச் சுதந்திரம்’ முன் வைக்கப்பட்டு அமெரிக்கப் பத்திரிகையாளர்கள் கவுரவிக்கப்பட உள்ளார்கள்.

2018-ம் ஆண்டு நிகழ்ந்த பல பத்திரிகையாளர்களின் படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் பத்திரிகைச் சுதந்திரத்துக்கான ஆதரவை அளிக்கும் வகையிலும் இந்தக் கொண்டாட்டம் முற்றிலும் பத்திரிகையாளர்களை கவுரவப்படுத்தும் விழாவாக முன் எடுக்கப்பட உள்ளது.

இந்நிகழ்வில் ‘தி கேப்பிடல்’ பத்திரிகை அலுவலகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சுட்டின்போது 5 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதற்கும், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர் கஷோகி கடந்த அக்டோபர் மாதம் துருக்கியில் படுகொலை செய்யப்பட்டதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட உள்ளது. இதன்படி நியூயார்க், புத்தாண்டில் பத்திரிகைச் சுதந்திரத்தையும், பத்திரிகையாளர்களையும் கொண்டாடுகிறது.

மேலும் பார்க்க: எச்.ஐ.வி தொற்று ரத்தத்தை தானம் செய்த இளைஞர் உயிரிழப்பு!

First published:

Tags: New Year Celebration, NewYork