Home /News /international /

அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே இந்த ஆண்டு போர் வெடிக்கும் - கொளுத்தி போட்ட டைம் ட்ராவலர்

அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே இந்த ஆண்டு போர் வெடிக்கும் - கொளுத்தி போட்ட டைம் ட்ராவலர்

அமெரிக்கா, வட கொரியா

அமெரிக்கா, வட கொரியா

பொதுவாகவே, இந்த இரண்டு நாடுகளும் பகை கொண்டவை என்பதும், இரு நாட்டு தலைவர்களும் முரண்டு பிடித்து பேசுவார்கள் என்பதும் நமக்கு தெரிந்த கதை தான்.

இப்போதும் சரி, இதற்கு முன்பும் சரி, சில நபர்கள் எதிர்காலத்தை கணித்து கூறுவதாக சொல்லி, சில அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடக்க இருப்பதாகக் கூறுவர். பெரும்பாலும், இதுபோன்ற நபர்களின் கற்பனையில் தான் அந்தக் கதைகள் அமைந்திருக்கும்.

தற்போது, இந்த வகை கதைகளில் லேட்டஸ்ட்டாக, உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் இரு நாடுகளுக்கு இடையே போர் நடக்க இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது 2022ஆம் ஆண்டில் பல புதிய போர்கள் நடைபெறும் என்றும், புதிதாக விண்வெளிகள் கண்டுபிடிக்கப்படும் என்றும் அந்த டைம் டிராவலர் கூறுகிறார். கடந்த 10ஆம் தேதி டிக் டாக்கில் வெளியான இதுகுறித்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

also read : ‘இருக்கு ஆனா இல்ல...' இப்படியொரு வீட்டை நீங்க பார்த்திருக்க சான்ஸே இல்ல! 

அவர் சொல்லியிருக்கும் கணிப்புகளில் மிக முக்கியமானது அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையே போர் நடக்கும் என்பதுதான். பொதுவாகவே, இந்த இரண்டு நாடுகளும் பகை கொண்டவை என்பதும், இரு நாட்டு தலைவர்களும் முரண்டு பிடித்து பேசுவார்கள் என்பதும் நமக்கு தெரிந்த கதை தான். ஆனால், தற்போது ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில், வெளியாகியுள்ள இந்தத் தகவலை முழுவதுமாக ஒதுக்கி தள்ளிவிட முடியாது. குறிப்பாக, ரஷ்யாவுக்கு பலம் சேர்க்கும் விதமாக, வட கொரிய படையினர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று நட்பு நாடு என்ற அடிப்படையில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அண்மையில் கூறியதாக செய்திகள் வெளியாகின.

அதே சமயம், வட கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளில், எந்த நாடு முதன் முதலில் போர் தொடுக்கும் என்ற விவரங்களை அவர் சொல்லவில்லை. இதேபோல, அந்த டைம் டிராவலர் சொல்லியுள்ள சில கணிப்புகளையும், அது எப்போது நடைபெறும் என்பதையும் இந்தச் செய்தியில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

also read : அரசு நலத்திட்டத்தை தவறாகப் பயன்படுத்தி ரூ.9 கோடி சூறையாடிய 2 பெண்கள்..

புதிய கொரோனா வைரஸ்:

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கிய கொரோனா ஒட்டுமொத்த உலகத்தையும் முடக்கி வைத்து விட்டு, 3 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் சற்று ஓயத் தொடங்கியிருக்கிறது. உலகம் நிம்மதிப் பெருமூச்சு விடும் இந்த வேளையில், ஏப்ரல் 19ஆம் தேதி, கொரோனாவின் புதிய வடிவமான ‘ஒமேகா’ பரவத் தொடங்கும் என்று இந்த டைம் டிராவலர் தெரிவிக்கிறார்.

புதிய விண்வெளி கண்டறியப்படும்:

மே 24ஆம் தேதி KLET - 33 என்ற புதிய கோளை நாசா கண்டுபிடிக்கும். அதில் உயிர் வாழ முடியும் என்று அவர்கள் கூறுவார்கள். ஜூன் 28ஆம் தேதி ஜியார்ஜியா மற்றும் தெற்கு கரோலினா இடையே கடும் சூறாவளி காற்று வீசக் கூடும். ஜூன் 23ஆம் தேதி மிக பலமான நிலநடுக்கும் கலிஃபோர்னியா மற்றும் சில இடங்களை தாக்கும். Meteor - 4 என்ற விண் கல் பூமியை நோக்கி வரும். அது செப்டம்பர் மாதத்தில் சீன கடற்கரை ஓரத்தில் விழும் என்று கூறி இருக்கிறார்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: America, North korea

அடுத்த செய்தி