பேசுவதை நிறுத்திவிட்டு நடவடிக்கைகளில் உலக நாடுகள் இறங்க வேண்டும் - பிரதமர் மோடி

பேசுவதை நிறுத்திவிட்டு நடவடிக்கைகளில் உலக நாடுகள் இறங்க வேண்டும் - பிரதமர் மோடி
நரேந்திர மோடி
  • News18
  • Last Updated: September 24, 2019, 8:21 AM IST
  • Share this:
பருவநிலை மாற்றம் தொடர்பாக பேசுவதை நிறுத்திவிட்டு அதற்கான நடவடிக்கைகளில் உலக நாடுகள் இறங்கி செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். 

ஒரு வார காலம் அமெரிக்காவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். ஹூஸ்டனில் நடைபெற்ற நலமா மோடி நிகழ்ச்சிக்கு பிறகு நியூயார்க் சென்ற பிரதமர், ஐ.நா.வின் பருவநிலை மாற்றம், மரபு சாரா எரிசக்தி தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்றார். அப்போது, பருவநிலை மாறுபாட்டுக்கு எதிராக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளைப் பட்டியலிட்ட பிரதமர், பேசுவதற்கான நேரம் முடிந்துவிட்டது என்றும் தற்போது உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம் தொடர்பாக செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பருவநிலை மாற்றத்தை வெல்ல உலக நாடுகளுக்கு இடையே விரிவான ஒருமித்த கொள்கை தேவைப்படுகிறது எனக் குறிப்பிட்ட அவர், மரபுசாரா எரிசக்தியை இந்தியா பயன்படுத்த தொடங்கி விட்டதாக சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, சூரிய சக்தி மின்சார உற்பத்திக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இன்னும் 3 ஆண்டுகளில் சூரிய சக்தி மின் உற்பத்தியில் இந்தியா மாபெரும் புரட்சியை உருவாக்கும். அதே போல நீர் பாதுகாப்புக்கு இந்தியா மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்தாண்டு இந்திய சுதந்திர தினத்தன்று ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக ஒரு பெரிய இயக்கத்தை தொடங்கி உள்ளோம். இது உலகளவில் மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.


மேலும் அனைவரின் வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு, 15 கோடி பேருக்கு எரிவாயு இணைப்பு, மருத்துவ காப்பீடு வசதி, ஜல்சக்தி திட்டம் உள்ளிட்ட இந்திய அரசின் நலத்திட்டங்களை பிரதமர் மோடி பட்டியலிட்டார். அப்போது திடீரென கூட்டத்திற்கு வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து 15 நிமிடங்கள் மோடியின் பேச்சை கேட்ட பிறகு புறப்பட்டுச் சென்றார்.

இதைத் தொடர்ந்து ஜெர்மன், இத்தாலி, பூட்டான், கத்தார், நெதர்லாந்து, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் இரு தரப்பு உறவுகள், வர்த்தகம் மற்றும் மேலாண்மை திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், ஐ.நா குழந்தைகள் அவசர கால நிதி நிறுவன இயக்குநரையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இதே போல, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் ஈரான், துருக்கி, பல்கேரியா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை சந்தித்து பேசினார்.

இதற்கிடையே, மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தின கொண்டாட்டத்தை ஒட்டி இன்று நியூயார்க் நகரில் இந்திய அரசு சார்பில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் நியூசிலாந்து, தென்கொரியா, சிங்கப்பூர் நாட்டு தலைவர்களும் மோடியுடன் பங்கேற்கிறார். இதைத் தொடர்ந்து ஐ.நா சபை தலைமை அலுவலகத்தின் உச்சியில் காந்தி சூரிய ஒளி பூங்கா தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்கும் மோடி, ல்டுவெஸ்ட்பெரியில் உள்ள நியூயார்க் பல்கலைக் கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி அமைதிப் பூங்காவையும் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.Also watch

First published: September 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்