பெரியவர் முதல் சிறியவர் வரை ஏராளமானோர் தங்களது திறமையை கொண்டு கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர் . அந்த வரிசையில் தற்போது பெண் ஒருவர் உலகில் மிகப்பெரிய வாயை கொண்டிருப்பதாக சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தை சேர்ந்தவர் சமந்தா ரெம்ஸ்டெல். டிக் டாக் செயலியில் ஏராளமான வீடியோக்கள் பதிவிட்டு தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள இவர், தனது டிக் டாக் பக்கத்தில் ஏராளமான வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார். 31 வயதாகும் அவர் பதிவிடும் வீடியோக்கள் அனைத்தும் சாப்பிடுவது தொடர்பானது தான்.
Also read: விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் ₹2000.. மத்திய அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்…
ஒரே நேரத்தில் மிகப்பெரிய தின்பண்டத்தை வாயில் வைத்து சாப்பிடுவார். எவ்வளவு பெரிய உணவாக இருந்தாலும், எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும் ஒரே வாயில் சாப்பிட்டு முடித்து விடுவதே சமந்தாவின் சிறப்பு. இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இவரால் மட்டும் எப்படி முடிகிறது? என கேள்வி எழுப்பினர். அதற்கான பதில் சமந்தா மிகப்பெரிய வாயை பெற்றிருப்பதேயாகும். இவரது வாய் சாதாரண மனிதர்களின் வாயை விட பெரியதாக இருக்கும். இவர் அதிக நீளத்திற்கு வாயை திறப்பதில் திறமைசாலியாக இருக்கிறார். இதனால் பெரிய அளவிலான ஆப்பிள், சாண்ட்விச் ஆகியவற்றை ஒரே வாயில் சாப்பிட்டு விடுகிறார். இவரின் பிரம்மிக்க வைக்கும் செயல் டிக் டாக்கில் பிரபலமான நிலையில், இவரை 1.7 மில்லியனுக்கும் அதிகமானோர் பாலோ செய்து வருகிறார்கள்.
Also Read: மயானத்தில் காதல் ஜோடிக்கு திருமணம் நடத்திய பெற்றோர்!
சமீபத்தில் கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பித்த சமந்தா அதில் வெற்றியும் பெற்றுவிட்டார். சமந்தா வாயில் உள்ள இடைவெளியின் அகலம் 6.56 செ.மீ, அதாவது 2.56 இன்ச் கொள்ளளவாக உள்ளது. ஒட்டு மொத்த வாயையும் அளந்து பார்த்தால் 10 செ .மீ.க்கும் அதிகமாக உள்ளது. இதனால் உலகின் மிகப்பெரிய வாய் கொண்ட பெண் என்ற கின்னஸ் சாதனையை அவர் படைத்துள்ளார். கின்னஸ் நிறுவனம் உலகின் மிகப்பெரிய வாயை கொண்ட பெண் என்ற சான்றிதழையும் அவருக்கு வழங்கியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதுகுறித்து பேசிய சமந்தா, "என் வாயால் பிரபலமாக முடியும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை, ஆனால் அது நடந்துள்ளது என்னால் நம்பமுடியவில்லை இது மிகவும் அருமையாக இருக்கிறது என மிகவும் மகிழ்ச்சியாக கூறியுள்ளார். "பெரிய உடல் பாகம் அல்லது தனித்துவமான திறமையால் கின்னஸ் உலக சாதனைப் பட்டம் பெற விரும்பும் பலரும் தங்கள் கனவுகளைத் தொடருங்கள்" என்றும் அவர் ஊக்குவித்தார். ,மேலும் குழந்தைகள் தனது பெரிய சைஸ் வாயை கேலி செய்வார்கள் என்பதை நினைவுகூர்ந்து வருத்தப்பட்டார். மேலும் இப்போது கொண்டாட்டத்தின் ஒரு புள்ளியாக எனது வாய் மாறிவிட்டது என்று தெரிவித்துள்ளார். சமந்தாவிற்கு தற்போது சமூகவலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tik Tok, World record