Home /News /international /

TikTok User | மாதம் ரூ.7.63 லட்சம் வருமானம் கிடைத்தாலும் போதாது என்று சொன்ன டிக் டாக் யூசர் - வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

TikTok User | மாதம் ரூ.7.63 லட்சம் வருமானம் கிடைத்தாலும் போதாது என்று சொன்ன டிக் டாக் யூசர் - வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

TikTok

TikTok

Tiktoker Slammed | அமெரிக்காவில் ஒரு மணி நேரத்திற்கு வழங்கப்படும் ஊதியம் போதுமானதா என்ற கேள்வி

    நம்மில் பலர் வருமானத்திற்கும், செலவுக்கும் இடையே உள்ள மாபெரும் இடைவெளியை சரி செய்ய இயலாமல் தவித்து வருபவர்களாக தான் இருப்போம். அதாவது “வரவு 8 அணா, செலவு 10 அணா’ என்ற பழமொழிக்கு ஏற்ப வருமானத்தைக் காட்டிலும் கூடுதலாக ஏற்படும் செலவை சமாளிக்க முடியாமல் நாம் திணறி கொண்டிருப்போம்.

    இப்போது வந்து கொண்டிருக்கும் வருமானத்தை காட்டிலும் சற்று கூடுதாக வந்தால், நம் செலவுகள் அனைத்தையும் சமாளித்து விடலாம் என்று கருதி கொண்டிருப்போம். அதுபோன்ற சூழலில், மிக அதிகமான சம்பளம் வாங்கும் நமக்கு தெரிந்த நண்பர்கள் யாரேனும் நம்மிடம் வந்து அவர்களுடைய வருமானம் போதுமானதாக இல்லை என்று சொன்னால், நம் மனதில் கோபம் பொத்து கொண்டு வருமல்லவா?

    அதுபோன்ற நிகழ்வு தான் தற்போது சமூக வலைதளங்களில் நடைபெற்று கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் அரிஸோனா மாகாணத்தில் இந்த பிரச்சினை பெரும் பேசு பொருளாக மாறியிருக்கிறது. அங்குள்ள லிவ் பி என்ற 25 வயது பெண், டிக்-டாக் தளத்தில் வீடியோ வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது சர்ச்சை ஆகியுள்ளது.

    அந்த வீடியோவில், “மாதம் ஒன்றுக்கு 10 ஆயிரம் டாலருக்கு (ரூ.7.63 லட்சம்) குறைவான வருமானத்தில் என்னால் வாழவே முடியாது. ஆண்டுதோறும் 1,17,000 டாலர்கள் (ரூ.89.3 லட்சம்) சம்பாதித்தாலும் அது எனக்கு போதுமானதாக இருக்காது. பிறருக்காக வேலை செய்வதைக் காட்டிலும் எனக்காக பிசினஸ் செய்வதே என்னுடைய விருப்பம். அமெரிக்காவில் ஒரு மணி நேர வேலைக்கு வழங்கப்படும் ஊதியம் போதுமானதாக இல்லை’’ என்று கூறியிருந்தார்.

    பிரச்னைக்கு மூல காரணம் :

    முன்னதாக, அமெரிக்காவில் ஒரு மணி நேரத்திற்கு வழங்கப்படும் ஊதியம் போதுமானதா என்ற கேள்வியுடன் சக நெட்டிசன்களுடன் விவாதத்தை தொடங்கினார் லிவ் பி. அதன் தொடர்ச்சியாக தான் இந்தக் கருத்துகளை அவர் தெரிவித்திருந்தார்.

    அப்போது நெட்டிசன் ஒருவர், தான் ரூ.89.3 லட்சம் சம்பாதித்து வருவதாகவும், அதுவே தனக்கு நல்ல ஊதியமாக இருக்கிறது என்றும் தெரிவித்தார். அதற்கு லிப் பி பதில் அளிக்கையில், “அமெரிக்கர்கள் சிலருக்கு இது பெரிய சம்பளமாக இருக்கலாம். ஏனென்றால் பல அமெரிக்கர்கள் மிகுந்த சிரமமான சூழலில் இருக்கின்றனர்’’ என்றார்.

    Read More : தலையற்ற முண்டமாக வலம் வந்த நபர்.. கூகுள் மேப்பில் இருந்த படத்தால் பரபரப்பு


    நெட்டிசன்கள் விமர்சனம் :

    89 லட்சம் அளவுக்கான வருமானம் கூட போதுமானதாக இல்லை என்று லிவ் பி கூறுகிறார் என்றால், அவர் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார் என்று அர்த்தம் என நெட்டிசன் ஒருவர் கமெண்ட் செய்தார். ஆனால், தான் சொகுசு வாழ்க்கை வாழவில்லை என்றும், சாதாரண வாழ்க்கை தான் வாழுகிறேன் என்றும் லிவ் பி பதில் அளித்தார்.

    இதைத் தொடர்ந்து மற்றொரு நெட்டிசன் பதில் அளிக்கையில், என்னுடைய 32 கால வாழ்க்கையில் இவ்வளவு பெரிய தொகையை நான் சம்பாதித்ததே இல்லை. ஆனால், அதுகூட போதுமானதாக இல்லை என லிவ் கூறுவது ஆச்சரியமாக இருக்கிறது என்று கூறினார்.

    நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் செய்த நிலையில், தனது கருத்துக்கு லிப் பி விளக்கம் அளித்தார். ஆண்டுக்கு 89 லட்சம் பெரிய தொகை என்றாலும், இளம் வயதில் உள்ள தன்னுடைய சுற்றுலா பயணம் மற்றும் சாப்பாடு போன்ற செலவுகளை சமாளிக்க அது போதுமானது அல்ல என்றார் அவர்.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: TikTok, Trending, Viral

    அடுத்த செய்தி