முகப்பு /செய்தி /உலகம் / "நான் ஒரு டைம் ட்ராவலர், 2027ல் இருக்கிறேன்.. நான் தான் எதிர்கால பூமியின் கடைசி மனிதன்".. TikToker வெளியிட்ட வீடியோ!

"நான் ஒரு டைம் ட்ராவலர், 2027ல் இருக்கிறேன்.. நான் தான் எதிர்கால பூமியின் கடைசி மனிதன்".. TikToker வெளியிட்ட வீடியோ!

Tik Toker

Tik Toker

அந்த வீடியோவில் "என் பெயர் ஜேவியர் மற்றும் நான் உலகில் தனியாக இருக்கிறேன்," என்று TikTok யூசர் எழுதியிருந்தார்.

  • 1-MIN READ
  • Last Updated :

டைம் ட்ராவல், திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் சாத்தியமாகும் ஒரு நிகழ்வு. இப்போதுவரை மனிதகுலத்திற்கு இது ஒரு கண்கவர் கனவாகவே இருக்கிறது. ஆனால் இங்கு ஒரு TikTok யூசர் தன்னை ஒரு டைம் ட்ராவலர் என்று கூறி வெளியிட்ட வீடியோ மிக வைரலானது. அதில் அந்த நபர் 2027ல் இருப்பதாகவும், நான் தான் இங்கு வாழும் கடைசி மனிதன் என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த நபரின் வீடியோ பதிவு மூலம் ஏராளமான கேள்விகளை எழுப்பியது.

unicosobreviviente என்ற பெயரில் இருந்த TikTok யூசர் கடந்த திங்களன்று வெளியிட்ட 21 வினாடிகள் நீளமான வீடியோவில், உயரத்தில் இருந்து நகரத்தை கீழ்நோக்கி காண்பிப்பது போல இருந்தது. அந்த வீடியோவில் பெரிய கட்டிடங்கள் மற்றும் ஒரு காலி குறுக்கு சாலை மற்றும் சாலையில் சில கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. ஆனால் மனிதர்கள் யாரும் தென்படவில்லை. ஆம், வீடியோவின் ஆரம்பத்தில் ஒரு பறவை பறக்கிறது. மேலும் அந்த வீடியோவில் "என் பெயர் ஜேவியர் மற்றும் நான் உலகில் தனியாக இருக்கிறேன்," என்று TikTok யூசர் எழுதியிருந்தார்.


அதே யூசர் பெயரில் ஒரு Instagram கணக்கு உள்ளது. அதிலும் TikTok இல் வெளியான அதே வீடியோ வெளியாகியுள்ளது. "நான் 2027 முதல் சரியான நேரத்தில் பயணம் செய்தேன். நான் உலகில் தனியாக இருக்கிறேன்." டிக்டோக்கில் 2.2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்ற வீடியோவுக்கு பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு யூசர் எழுதியிருந்ததாவது, "இவை உண்மையில் லாக்கடவுன் சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் என்று கூறியுள்ளார்.

Also read:  வழுக்கை தலையில் விக்.. இளம்பெண்களை ஏமாற்றி உல்லாசம்: பலே கில்லாடி கைது

மற்றொரு பயனர் குறிப்பிட்டதாவது, “நீங்கள் பூமியில் உள்ள கடைசி மனிதர் என்றால், போக்குவரத்து விளக்குகள் எப்படி எரிகின்றன? இன்னும் மின்சாரம் எப்படி இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பினார். மற்றொரு யூசர் எழுதியதாவது, நீங்கள் கூறுவது உண்மையானால் வழக்கமாக நெரிசலாக இருக்கும் இடத்திலிருந்து நேரடி ஸ்ட்ரீம் செய்ய வேண்டும் என ஜேவியருக்கு சவால் விடுத்தார். கருத்துகளுக்கு பதிலளிக்கும் விதமாக, ஜேவியர் குறிப்பிட்டிருந்ததாவது, "நீங்கள் எழுந்தவுடன், எல்லாம் இடம் மாறும். நான் 2021 மற்றும் 2027 க்கு இடையில் சிக்கிக்கொண்டேன். நான் உங்களுக்கு இணையான உலகில் இருக்கிறேன்" என்று பதிலளித்திருந்தார். அவர் கூறிய பதிலும் பலருக்கு முட்டாள்தனமாகவே தெரிந்தது.

Also read:   உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது திருமலை திருப்பதி தேவஸ்தானம்...

சமூக ஊடகங்களில் யாரோ ஒருவர் தன்னை ஒரு டைம் ட்ராவலர் என்று கூறிக்கொண்டு, இன்னும் நடக்கவிருக்கும் நிகழ்வுகளை முன்னறிவிப்பது அவ்வளவு அரிதான காரியம் அல்ல. Ladbible இன் கூற்றுப்படி, இவரை போலவே மற்றொரு TikTok யூசரான @aesthetictimewarper என்பவர், தன்னை ஒரு நேரப் பயணி என்று கூறிக்கொண்டு, பல தைரியமான கணிப்புகளை வெளியிட்டு மக்களை பல விஷயங்களுக்கு தயாராக இருக்கும்படி கேட்டுக் கொண்டார். உதாரணத்திற்கு, ஆகஸ்ட் 3, 2021ம் தேதி அன்று நாசா ஒரு பிரதிபலிப்பு பூமியைக் கண்டுபிடிக்கும் என்று அவர் கூறியிருந்தார். அத்தகைய ஒன்றை நாசா கண்டுபிடிக்காததால் அந்த கணிப்பு பொய்யானது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Tik Tok