கனடாவைச் சேர்ந்த டிக்டாக் நட்சத்திரமான 21 வயதே ஆன மேகா தாக்குர்,திடீரென்று எதிர்பாராத விதமாக இறந்துவிட்டதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
மேகா தாக்கூருக்கு ஒரு வயதாக இருந்தபோது அவரது பெற்றோர் கனடாவுக்கு குடிபெயர்ந்தனர். 2019 இல் மேஃபீல்ட் மேல்நிலைப் பள்ளியில் தேர்ச்சி பெற்ற பிறகு, அவர் மேற்கத்திய பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். கல்லூரியில் சேர்ந்த உடனேயே டிக் டாக்கில் அறிமுகமானார்.
டிக்டாக்கில் 930,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்த தாக்கூர், அதன் பிறகு மேகா தாக்கூர் இன்ஸ்டாகிராமிலும் பிரபலமானார். 100,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்த அவர் உடல் பாசிடிவிட்டியை ஊக்குவிப்பதில் பெயர் பெற்றவர். அவர் நடனமாடும் வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து வந்தார்.
இதையும் படிங்க : பேச்சிலர்ஸ்களுக்கு வீடு கிடைக்கல - டிவிட்டரில் ஆற்றாமையை பகிர்ந்து கொண்ட பெங்களூரு பெண்.!
இந்நிலையில் அவரது சுயவிவரத்தின் இன்ஸ்டாகிராம் பதிவில், அவர் நவம்பர் 24 அன்று இறந்ததாக அவரது பெற்றோர் பகிர்ந்துள்ளனர்.
"எங்கள் வாழ்க்கையின் ஒளியை, எங்கள் அன்பான, அக்கறையுள்ள மற்றும் அழகான மகள் மேகா தாக்கூர், நவம்பர் 24, 2022 அன்று அதிகாலையில் திடீரென எதிர்பாராதவிதமாக காலமானார் என்று கனத்த இதயங்களுடன் அறிவிக்கிறோம்," என்று அவர்கள் எழுதினர்.
View this post on Instagram
உணர்ச்சிப்பூர்வமான பதிவில், மேகாவை ஒரு தன்னம்பிக்கை மற்றும் சுதந்திரமான இளம் பெண் என்று அவரது பெற்றோர் வர்ணித்துள்ளனர்.
"மேகா தன்னம்பிக்கை மற்றும் சுதந்திரமான இளம் பெண். அவர் மிகவும் மிஸ் செய்கிறோம். அவர் தனது ரசிகர்களை அபரிமிதமாக நேசித்தார், மேலும் அவர் மறைந்ததை நீங்கள் அறிய விரும்புவார். இந்த நேரத்தில், மேகாவுக்கு உங்கள் ஆசீர்வாதங்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அவளது முன்னோக்கிய பயணத்தில் உங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவளுடன் இருக்கும்." என்று அவளது பெற்றோர் பதிவிட்டனர்
பல ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் மேகா தாக்கூருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது வீடியோக்களில் கைலி ஜென்னர் மற்றும் பெல்லா ஹடிட் போன்ற பிரபலமான பிரபலங்களைப் பற்றிய குறிப்புகள் பெரும்பாலும் அடங்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.