ஹாங்காங்கில் செயல்பாட்டை நிறுத்தும் டிக்டாக்

ஹாங்காங்கில் செயல்பாட்டை நிறுத்துவதாக டிக்டாக் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஹாங்காங்கில் செயல்பாட்டை நிறுத்தும் டிக்டாக்
டிக் டாக்
  • Share this:
இந்தியாவில் டிக் - டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவிலும் டிக் - டாக் உள்ளிட்ட சீன செயலிகளை தடை செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடியது என்ற காரணத்தால் டிக்டாக், யூசி ப்ரோசர் உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்வதாக மத்திய அரசு அறிவித்த நிலையில் தடைசெய்யப் பட்டது.

ALSO READ : இந்தியாவில் இணையவழி தாக்குதல் 200% அதிகரிப்பு - சீனா காரணமா...?


இதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளை தடை செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்தார்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கொரோனாவைப் பரப்பியதால் அமெரிக்கா மட்டுமல்லாது, உலக நாடுகளுக்கு சீனா மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்திவிட்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.

உலகின் 189 நாடுகளில் சீனா பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், வைரஸ் பரப்பியதன் ரகசியத்தை சீனா மூடி மறைப்பதாகவும் டிரம்ப் குற்றசாட்டு வைத்தார். இந்நிலையில் அமெரிக்காவில் டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளை தடை செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

 

இது ஒருபுறம் இருக்க, ஹாங்காங்கை சீனா தன்வசப்படுத்த முயன்று வருகிறது. அதன்படி ஹாங்காங்கை தன் வசமாக்கும் சட்ட திருத்தத்தை கொண்டுவர முடிவெடுத்தது. இதனால் ஹாங்காங்கில் சீனாவுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன. தற்போது, சீன செயலியான டிக்டாக், தங்களது செயல்பாட்டை
ஹாங்காங்கில் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading