அநாகரீகமான வீடியோக்கள் வருவதாக தொடர் புகார் - டிக்டாக் செயலிக்கு பாகிஸ்தானிலும் தடை

அநாகரீகமான வீடியோக்கள் வருவதாக தொடர் புகார் எழுந்ததையடுத்து, டிக்டாக் செயலிக்கு பாகிஸ்தானில் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

அநாகரீகமான வீடியோக்கள் வருவதாக தொடர் புகார் - டிக்டாக் செயலிக்கு பாகிஸ்தானிலும் தடை
டிக்டாக் செயலிக்கு பாகிஸ்தானிலும் தடை
  • Share this:
இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் டிக்டாக் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. அதேபோல அமெரிக்காவிலும் டிக்டாக் செயலிக்கு கடந்த மாதம் தடைவிதிக்கப்பட்டது. ஆனால், அமெரிக்க அரசின் தடையை அந்நாட்டு நீதிமன்றம் ரத்து செய்தது. இந்தநிலையில், விதிகளை மீறியதாக பிரபல பொழுதுபோக்கு செயலியான டிக்டாக் பாகிஸ்தானிலும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. அநாகரீகமான வீடியோக்கள் அதிகளவில் வருவதாக அந்நாட்டு அரசுக்கு தொடர் புகார்கள் சென்றதை அடுத்து பாகிஸ்தான் தொலைத் தொடர்பு அதிகாரிகள் டிக்டாக் சேவையை நிறுத்தியுள்ளனர்.Also read: பறக்கும் விமானத்தின் கழிவறையில் கர்ப்பிணிக்கு வெற்றிகரமாக பிரசவம் பார்த்த டாக்டர் சைலஜா - குவியும் பாராட்டுக்கள்

கடந்த ஜூலை மாதத்தில் இதே சர்ச்சை எழுந்ததை அடுத்து சீன நிறுவனமான டிக்டாக்குக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை நோட்டீஸ் விடுத்திருந்தது. இந்நிலையில் டிக்டாக் சேவைக்கு தற்காலிக தடை விதிப்பதாக பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
First published: October 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading