ஹோம் /நியூஸ் /உலகம் /

அரசு ஊழியர்களின் சாதனங்களில் டிக் டாக் செயலியை பயன்படுத்த தடை.. அமெரிக்காவில் மசோதா நிறைவேற்றம்

அரசு ஊழியர்களின் சாதனங்களில் டிக் டாக் செயலியை பயன்படுத்த தடை.. அமெரிக்காவில் மசோதா நிறைவேற்றம்

டிக் டாக்

டிக் டாக்

Tik Tok | அரசு ஊழியர்களின் ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லட் உள்ளிட்ட சாதனங்களில் டிக்டாக் செயலியை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • internat, Indiaamericaamerica

அமெரிக்காவில் அரசு ஊழியர்களின் சாதனங்களில் டிக்டாக் செயலியை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சீன நிறுவனங்களும் சீன செயலிகளும் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், சீன செயலிகளில் ஒன்றான டிக்டாக்-ஐ தடை செய்ய வேண்டும் என அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.

இதனையடுத்து முக்கிய நடவடிக்கையாக, அரசு ஊழியர்களின் ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லட் உள்ளிட்ட சாதனங்களில் டிக்டாக் செயலியை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Also Read : 11 நாட்களுக்கு சிரிப்புக்கு தடை.. சத்தம்போட்டு அழவும் கூடாது - அதிரடி உத்தரவிட்ட வடகொரிய அரசு!

இதற்கு அதிபர் ஜோ பைடனின் ஒப்புதல் கிடைத்தவுடன், நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளது.

டிக்டாக் செயலி மூலம் அமெரிக்க மக்களையும், அரசு அதிகாரிகளையும் சீனா அரசு வேவு பார்ப்பதாக புகார் எழுந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: America, Tik Tok