• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • விலங்குகளுக்கு கொரோனா தடுப்பூசி: உயிரியல் பூங்காவில் COVID தடுப்பூசி போடும் பணி தொடக்கம்!

விலங்குகளுக்கு கொரோனா தடுப்பூசி: உயிரியல் பூங்காவில் COVID தடுப்பூசி போடும் பணி தொடக்கம்!

சிங்கம்

சிங்கம்

முதன்முதலில் பூங்காவில் உள்ள புலிகள், கருப்பு மற்றும் கிரிஸ்லி கரடிகள், மலை சிங்கங்கள் மற்றும் ஃபெர்ரெட்டுகள் ஆகியவை தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை பெற்றன.

  • Share this:
கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் அமைந்துள்ள உயிரியல் பூங்காவில் புலிகள், கரடிகள் மற்றும் ஃபெரெட்ஸ் ஆகியவற்றிற்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இந்த வாரம் ஓக்லாண்ட் உயிரியல் பூங்காவில் ஜிஞ்சர் மற்றும் மோலி என்றழைக்கப்படும் இரண்டு புலிகளுக்கு முதன் முறையாக தடுப்பூசி போடப்பட்டதாக சான் பிரான்சிஸ்கோ குரோனிக்கிள் என்ற பத்திரிகை கடந்த சனிக்கிழமை தெரிவித்திருந்தது.

விலங்குகளுக்கான தடுப்பூசி டோஸ்களை நியூ ஜெர்சியில் உள்ள கால்நடை மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜோயிடிஸ் நன்கொடையாக உருவாக்கி தந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உயிரியல் பூங்காவில் பணிபுரியும் கால்நடை சேவைகளின் துணைத் தலைவர் அலெக்ஸ் ஹெர்மன் கூறியதாவது, பூங்காவில் உள்ள எந்த விலங்குகளுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் எதிர்காலத்தில் அவற்றிற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் இருக்க விரும்புகிறோம் எனவே அவற்றிற்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்று கூறினார். முதன்முதலில் பூங்காவில் உள்ள புலிகள், கருப்பு மற்றும் கிரிஸ்லி கரடிகள், மலை சிங்கங்கள் மற்றும் ஃபெர்ரெட்டுகள் ஆகியவை தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை பெற்றன.

Also Read:   பூமியின் அழிவு எப்போது?: சரியாக கணித்த ஆராய்ச்சியாளர்கள்!

அதற்கடுத்ததாக விலங்குகள் மற்றும் பன்றிகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. இது தொடர்பாக பூங்கா நிறுவனம் வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில், மிருகக்காட்சிசாலையானது சமூக விலகலை பராமரிக்க சில தடுப்புகளை பயன்படுத்தி வருவதாகவும், பாதிக்கப்படக்கூடிய உயிரினங்களைப் பாதுகாக்க ஊழியர்கள் பாதுகாப்பு கியர் அணிந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

தற்போது விலங்குகளுக்கு வழங்கப்படும் இந்த தடுப்பூசி மூலம் அவற்றை சிறப்பாக பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாக அலெக்ஸ் தெரிவித்துள்ளார். ஏறக்குறைய 70 உயிரியல் பூங்காக்களில் வாழும் விலங்குகளுக்கும், 27 மாநிலங்களில் அமைந்துள்ள ஒரு டஜன் கன்சர்வேட்டரிகள், சரணாலயங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகளுக்கும் சுமார் 11,000-க்கும் மேற்பட்ட டோஸ்களை ஜோயிட்டிஸ் நிறுவனம் நன்கொடையாக அளித்து வருவதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read:   புதிய வரலாறு படைத்தார் மிதாலி ராஜ்: ஆடவர், மகளிர் கிரிக்கெட்டின் உச்சபட்ச சாதனை இரண்டும் இந்தியா வசமானது!

கடந்த ஜனவரி, கொரோனா பரவல் அதிகரித்து வந்த சூழ்நிலையில் சான்டியாகோ உயிரியல் பூங்காவில் அமைந்துள்ள சஃபாரி பார்க்கில் பராமரிக்கப்பட்டு வரும் கொரில்லாக்களில் சிலவற்றிற்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. பெரிய குரங்குகள் அதாவது கொரில்லாக்கள் தங்கள் DNA-வில் 98% மனிதர்களுடன் பகிர்ந்து கொள்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதாவது மனிதர்களின் DNA-வுடன் ஒத்துப்போகின்றன. மேலும் அவை பெலினஸை போலவே குறிப்பாக பாதிக்கப்படுகின்றன. இதுவரை விலங்குகளில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்புகளில் கொரில்லாக்கள், புலிகள் மற்றும் உயிரியல் பூங்காக்களில் சிங்கங்கள் மற்றும் வீட்டு பூனைகள் மற்றும் நாய்கள் ஆகியவை அடங்கும். சமீபத்தில் கூட சென்னை வண்டலூர் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: