ஹோம் /நியூஸ் /உலகம் /

திடீர் பனிச்சரிவு.. சிக்கிக்கொண்ட 70 வாகனங்கள்..திபெத்தில் அதிர்ச்சி!

திடீர் பனிச்சரிவு.. சிக்கிக்கொண்ட 70 வாகனங்கள்..திபெத்தில் அதிர்ச்சி!

பனிச்சரிவு (மாதிரிப்படம்)

பனிச்சரிவு (மாதிரிப்படம்)

Tibet : திபெத்தில் ஏற்பட்ட பனிசரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சீனாவின் தன்னாட்சி பிரதேசமான திபெத்தின், தென்மேற்கு பகுதியில் உள்ள நியிஞ்சி நகரில் திடீர் பனிச்சரிவு ஏற்பட்டது. நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் ஏற்பட்ட பனிச்சரிவில் பல்வேறு வாகனங்கள் சிக்கிக் கொண்டன. தகவல் அறிந்து 131 மீட்பு படை வீரர்கள், 28 அவசர கால வாகனத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.துரிதமாக செயல்பட்ட வீரர்கள், 70 வாகனங்களில் இருந்த 246 பேரை பத்திரமாக வெளியேற்றினர். இருப்பினும் பனிசரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். பனிச்சரிவு ஏற்பட்ட நியிஞ்சி நகரம், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3 ஆயிரத்து 100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சுற்றுலா ஆர்வலர்களால் "திபெத்தின் சுவிட்சர்லாந்து" என்று அழைக்கப்படும் நியிஞ்சியில் ஏற்பட்ட பனிச்சரிவில் 8 பேர் உயிரிழந்தது பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

First published: