ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்டில் பகுதியில் சனிக்கிழமை அன்று நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பில் மூன்று மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் பலத்த காயம் அடைத்துள்ளனர்.
அந்த பகுதியின் காவல் அதிகாரி அகமது ஜான் இந்த சம்பவத்தைப் பற்றித் தெரிவிக்கையில் சனிக்கிழமை மதியம் அன்று ஹைவேர் பஜார் பகுதியில் குண்டு விடுப்பு நிகழ்ந்துள்ளது என்று கூறியுள்ளார். இந்த குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மாணவர்கள் என்று தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு முந்தைய நாள் தான் மேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதி ஒன்றில் தொழுகையின் போது பயங்கர குண்டு வெடிப்பு ஏற்பட்டு தாலிபான் மதகுரு உட்பட 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் குண்டு வெடிப்பு தொடர்கிறது.
Also Read : அமேசான் காட்டில் வாழ்ந்த கடைசி பழங்குடி மனிதன் - 20 வருடம் தனியாக வாழ்ந்த நிலையில் மரணம்
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியைக் கைப்பற்றி ஒரு வருடம் ஆன நிலையில் நாட்டின் பல இடங்களில் பரவலாகக் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்து கொண்டு வருகிறது. கடந்த மாதம் தலைநகர் காபூலில் நடந்த பல குண்டு வெடுப்புகளில் ஏராளமான அப்பாவி மக்கள் பலியாகினர்.
தாலிபான் ஆட்சியை எதிர்க்கும் வலதுசாரி குழு இந்த மாதிரியான எதிர்ப்பு தாக்குதல்களை நடத்திக்கொண்டு வருகின்றனர். இதனால் நாட்டின் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் தாலிபான் அரசு பெண்களுக்கு இருந்த சுதந்திரத்தைக் குறைத்து, அவர்களுக்குப் படிப்பு, வாழ்க்கை போன்றவற்றில் கட்டுப்பாடுகள் கொண்டுவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Afghanistan, Students killed, Taliban