பூமியைப் போலவே உள்ள 3 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு!

பூமியில் இருந்து 73 ஒளி ஆண்டுகள் தொலைவில், இந்த கிரகங்கள் இருப்பதாகவும், இதுகுறித்து அடுத்தக்கட்ட ஆய்வுகள் நடைபெற உள்ளதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: July 30, 2019, 8:03 AM IST
பூமியைப் போலவே உள்ள 3 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு!
3 புதிய கிரகங்கள்
Web Desk | news18
Updated: July 30, 2019, 8:03 AM IST
பூமியைப் போலவே உள்ள மூன்று புதிய கிரகங்களை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சூரிய குடும்பத்துக்கு வெளியே மனிதர்கள் வாழத் தகுந்த கிரகங்கள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்வதற்காக, டெஸ் என்று அழைக்கப்படக் கூடிய விண்வெளி தொலை நோக்கியை அமெரிக்காவின் நாசா அமைப்பு விண்ணிற்கு அனுப்பியது.

இதில் தற்போது புதியதாக 3 கிரகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. TOI 270 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகங்கள், பூமியின் அளவை விட பெரியதாக உள்ளது தெரிய வந்துள்ளது. மனிதர்கள் மற்றும் பிற உயிர்கள் வாழத்தகுந்த அளவிற்கு இந்த மூன்று கிரகங்களிலும் தட்பவெப்பம் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பூமியில் இருந்து 73 ஒளி ஆண்டுகள் தொலைவில், இந்த கிரகங்கள் இருப்பதாகவும், இதுகுறித்து அடுத்தக்கட்ட ஆய்வுகள் நடைபெற உள்ளதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க... நம்பிக்கை நாயகன் அப்துல்கலாம்

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...