Home /News /international /

மூன்று பேரில் ஒருவரை விரட்டும் நீண்ட கால கொரோனா பாதிப்பு - அமெரிக்க ஆய்வில் அதிர்ச்சி தகவல்

மூன்று பேரில் ஒருவரை விரட்டும் நீண்ட கால கொரோனா பாதிப்பு - அமெரிக்க ஆய்வில் அதிர்ச்சி தகவல்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Long Covid / கோவிட் பாதிப்பில் இருந்து மீண்ட மூன்று பேரில் ஒருவருக்கு அதன் பக்க விளைவுகள் நீண்ட காலம் தொடருவதாக அமெரிக்க பல்கலைக்கழக ஆய்வு தகவல் தெரிவிக்கிறது.

    கோவிட்-19 பாதிப்பிலிருந்து மீண்டவர்களிடம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு தொடர்பான விரிவான அறிக்கை Journal of General Internal Medicine என்ற நாளேட்டில் வெளியாகியுள்ளது. அதில், கோவிட்-19 பாதித்த மூன்றில் ஒருவருக்கு லாங் கோவிட் எனப்படும் நீண்டகால கோவிட்-19 தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சிக்குரிய தகவல் வெளியாகியுள்ளது.

    SARS-CoV-2 என்ற கோவிட்-19 பெருந்தொற்று பாதித்தவர்களில் பலர் இந்த நீண்ட கால கோவிட் பாதிப்புக்கு ஆளாவதாக மருத்து ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு நோயிலிருந்து குணமடைந்த பின்னரும், பக்க விளைவுகளாக பல்வேறு உபாதைகள் தென்படுகின்றன. அமெரிக்க பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வின் படி, நீரிழிவு நோய் மற்றும் அதிக உடல் பருமன் கொண்ட நபர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை பெற்றவர்கள் ஆகியோருக்கு இந்த நீண்ட கால கோவிட் பாதிப்பு பிரச்னை ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: லாக்டவுன் விதிமுறை மீறி பார்டி - நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்கும் பிரமதர் போரிஸ் ஜான்சன்

    அதேவேளை, இந்த லாங் கோவிட் பிரச்னை அந்நபர்களின் இனம், வயது, பாலினம், சமூக பொருளாதார நிலை உள்ளிட்ட கூறுகளை சர்ந்தது இல்லை எனவும் ஆய்வு தெரிவிக்கிறது. நீண்ட கால கோவிட் தொந்தரவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் சோர்வு, மூச்சு திணறல் போன்ற தொல்லைகள் தொடர்ந்து வருவதாக ஆய்வு கூறுகிறது.

    2020 ஏப்ரல் மாதம் தொடங்கி 2021 பிப்ரவரி மாதம் வரை கோவிட் பாதிப்புக்குள்ள நபர்களிடம் 90 நாள்கள் கழித்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வை மேலும் விரிவுபடுத்தும் விதமாக பல்வேறு பகுதிகள், மருத்துவ சூழல்களை சேர்ந்தவர்களை நீண்டகால பரிசோதனைக்கு உட்படுத்த ஆய்வு குழு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தொற்று பாதிப்பு ஆளானவர்களின் அடிப்படை சிக்கல்கள் கண்டறியப்பட்டு, அதற்கான தீர்வு விரைந்து அளிக்க மருத்துவதுறை தயாராகும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த மார்ச் மாதம் பிரிட்டன் நாட்டின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், நீண்ட கால கோவிட் பிரச்னையால் பாதிக்கப்பட்ட 10இல் ஏழு பேருக்கு ஞாபக சக்தி திறன் குறைவாகவும், ஒரு விஷயத்தில் நீண்ட நேரம் கவனம் செலுத்துவதில் சிக்கல் ஏற்படுவதாகவும் தெரியவந்துள்ளது. எனவே, கோவிட்-19 தொற்று பாதிப்பிலிருந்து மீண்டார்கள், தங்கள் உடல் நலனை நீண்ட காலம் கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும் என ஆய்வு அறிவுறுத்தியுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Covid-19

    அடுத்த செய்தி