முகப்பு /செய்தி /உலகம் / உக்ரைனுக்கு ஆயுதம் வழங்க எதிர்ப்பு... பிரான்ஸில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம்..!

உக்ரைனுக்கு ஆயுதம் வழங்க எதிர்ப்பு... பிரான்ஸில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம்..!

பிரான்ஸ்சில் மக்கள் போராட்டம்

பிரான்ஸ்சில் மக்கள் போராட்டம்

உக்ரைனுக்கு ஆயுதம் வழங்குவதை எதிர்த்து பிரான்ஸ் நாட்டில் பிரம்மாண்ட போராட்ட பேரணி நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, IndiaParisParisParisParis

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் 2022 பிப்ரவரி 24ஆம் தேதி  உக்ரைன் மீதான போர் நடவடிக்கையை தொடங்கினார். ஆரம்பத்தில் ரஷ்ய படைகள் வேகமாக முன்னேறி உக்ரைனை திணறடித்தன. இருப்பினும், அமெரிக்கா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் பதில் தாக்குதலை சிறப்பாக மேற்கொண்டு போரில் தாக்குபிடித்து வருகிறது. போர் தொடங்கி கிட்டத்தட்ட ஓராண்டு காலம் ஆகியும் முடிவுக்கு வராமல் உள்ளதால் உலக நாடுகள் கவலையில் உள்ளன.

போரில் உக்ரைனுக்கு தனது ஆதரவை உறுதியாக பிரதிபலிக்கும் விதமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் நாட்டிற்கு வருகை தந்து அதிபர் செலன்ஸ்கியை சந்தித்தார். போரில் உக்ரைனுக்கு உதவும் விதமாக ஆயுதங்கள் உள்ளிட்ட தளவாடங்களை அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் வழங்கி உதவி வருகின்றன.

இதையும் படிங்க.. மம்முட்டியின் நடிப்பில் மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்... தமிழில் சத்யராஜ் நடிப்பில் தோல்வியடைந்த படம்!

ஓராண்டை கடந்து தீர்வு எட்டாத இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதம் வழங்குவதை எதிர்த்து பிரான்ஸ் நாட்டில் போராட்டம் நடத்தப்பட்டது. பாரீஸ் நகர வீதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு பதாகைகளை ஏந்த போராட்டம் நடத்தினர்.

கையில் பிரான்ஸ், உக்ரைன் கொடிகளை ஏந்திக்கொண்டு “போரை நிறுத்துங்கள், மூன்றாம் உலகப் போர் வேண்டாம், அமைதி வேண்டும், நேட்டோவை விட்டு வெளியேறுங்கள்” போன்ற கோஷங்களை எழுப்பினர். மேலும், இந்த வாசகங்களை கொண்ட பதாகைகளை தூக்கி பேரணியாக சென்றனர். அத்துடன் பலரும் போர் நிறுத்தத்திற்கு கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

அதேபோல், உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதற்கு ஜப்பான் நாட்டிலும் எதிர்ப்பு குரல் உருவாகியுள்ளது. அந்நாட்டில் பிரபல பத்திரிக்கை நடத்திய கருத்துக்கணிப்பில் 76 சதவீதம் பேர் போரில் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்குவதை எதிர்த்து வாக்களித்துள்ளனர். 16 சதவீதம் பேர் மட்டுமே உக்ரைனுக்கு ஆயுதம் வழங்க ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேவேளை, போர் பாதித்த உக்ரைன் நாட்டிற்கு பொது உதவிகளை வழங்க 66 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: France, Japan, NATO Force, Russia - Ukraine, War