ஹோம் /நியூஸ் /உலகம் /

ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம்

ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம்

படம்

படம்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பான விசாரணையில் சர்வதேச ஒத்துழைப்பிற்கு தயாராக உள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. அதே நேரத்தில், ஈரான் அரசுக்கு எதிராக அந்நாட்டில் போராட்டம் வெடித்துள்ளது.

  உக்ரைன் நாட்டு பயணிகள் விமானத்தை ஈரான் ராணுவம் தவறுதலாக சுட்டு வீழ்த்தியதில் ஈரானைச் சேர்ந்த 82 பேர் உயிரிழந்தனர். கனடா 63, உக்ரைன் 11, ஸ்வீடன் 10, ஆப்கன், ஜெர்மனி தலா 4, பிரிட்டன் 3 என மொத்தம் 95 வெளிநாட்டு பயணிகள் உயிரிழந்தனர்.

  இதற்காக, ஈரான் அரசைக் கண்டித்து, அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் வெடித்துள்ளது. ஈரான் அரசு பதவி விலக வலியுறுத்தி, தெஹ்ரான் கல்லூரி மாணவர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  அப்போது, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைக்க முயற்சித்ததால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது.

  இந்தப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக ஈரானுக்கான பிரிட்டன் தூதர் டோம்னிக் ராப் Dominic Raab கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரிட்டன் அரசு, சர்வதேச சட்டத்தை ஈரான் அரசு மீறியதாக குற்றம்சாட்டியுள்ளது.

  இதே போல, ஈரானில் நடைபெறும் போராட்டங்களை கண்காணிக்க சர்வதேச மனித உரிமை அமைப்புகளை அந்நாட்டு அரசு அனுமதிக்க வேண்டுமென அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

  இந்நிலையில், தங்கள் நாட்டு விவகாரத்தில் ஈரானும், அமெரிக்காவும் தலையிடக் கூடாது என வலியுறுத்தி ஈராக் மக்கள் கர்பாலா நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே வன்முறை வெடித்தது.

  ஈரான், அமெரிக்கா போர் பதற்றம் தணிந்த சூழலில் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம், சம்பந்தப்பட்ட நாடுகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விசாரணையில் சர்வதேச ஒத்துழைப்பிற்கு ஈரான் தயாராக உள்ளதாக அந்நாட்டு அதிபர் ஹசன் ரவ்ஹானி உறுதியளித்துள்ளார்.

  Published by:Yuvaraj V
  First published:

  Tags: US-Iran Tensions