அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பரவி வரும் காட்டுத்தீயால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் வடக்கு பகுதியை தகிக்க வைத்துக் கொண்டிருக்கும் காட்டுத் தீ இது. ஒன்று இரண்டல்ல, சுமார் நூறு இடங்களில் பற்றி எரியும் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகிறார்கள்.
இதுவரை 3,00,000 ஏக்கர் பரப்பை தீ கபளீரகம் செய்து விட்டது. தற்போது 85 ஏக்கர் அளவில் எரிந்த வரும் தீயை அணைக்க ஏற்கெனவே 7,000 பேர் போராடி வருகிறார்கள்.
தற்போது நிலமை கை மீறிப் போக குடியிருப்புகளை தீ அச்சுறுத்தி வருவதால் மேலும் 125 தீயணைப்பு வாகனங்களும், ஆயிரம் வீரர்களும் வேண்டும் என்று நாட்டின் மற்ற மாகாணங்களிடம் உதவி கேட்டுள்ளது கலிபோர்னியா.
Also read... உலகின் பெரிய சதுப்பு நிலமான பேண்டனாலில் பற்றி எரியும் காட்டுத்தீ
ஒரு லட்சம் பேர் வசிக்கும் வாகவில்லே பகுதியை காட்டுத் தீ சுற்றி வளைத்துள்ளது. 50 வீடுகள் தீயில் எரிந்து சேதமடைந்த நிலையில் 2,000 வீடுகள் தீயில் சிக்கும் நிலையில் உள்ளன. அதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சான்டா க்ரூஷ், சான் மாடியோ பகுதிகளில் இருந்து சுமார் 22 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். கடந்த 3 நாட்களுக்குள் 11 ஆயிரம் மின்னல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் தீ மேலும் வரவி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: California, Fire, Forest sector, United States of America