சீனாவில் வேகமாக பரவும் புதிய பாக்டீரியா தொற்று... ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் அபாயம்!

இந்த வகை பாக்டீரியாக்கள் வீக்கமடைந்த விந்தணுக்கள் மற்றும் சில ஆண்களை மலட்டுத்தன்மையடைய செய்யும் என்று ஆய்வு முடிவுகள் எச்சரிக்கிறது.

சீனாவில் வேகமாக பரவும் புதிய பாக்டீரியா தொற்று... ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் அபாயம்!
மாதிரி படம்
  • News18 Tamil
  • Last Updated: September 18, 2020, 5:56 PM IST
  • Share this:
சீனாவில் ஏற்பட்டுள்ள புதிய பாக்டீரியா தொற்றால் ஆயிரக்கணக்கான ஆண்களுக்கு குழந்தைப்பேறு இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

வடமேற்கு சீனாவில் பல ஆயிரம் பேர் ப்ருசெல்லோசிஸ் என்ற பாக்டீரியா நோய்க்கான சோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக சீன அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியுள்ளனர். சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸிற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காத நிலையில் தற்போது மற்றொரு வைரஸ் ஒன்று பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்சு மாகாணத்தின் தலைநகரான லான்ஷோவின் சுகாதார ஆணையம் இந்த தகவலை உறுதி செய்துள்ளது. லான்ஷோவின் சுகாதார ஆணையத்தின் கூற்றுப்படி, சீனாவில் தற்போது வரை 3,245 பேர் இந்த புதிய வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ப்ரூசெல்லா என்ற பாக்டீரியாவை கொண்டிருக்கும் கால்நடைகளுடனான தொடர்பு காரணமாக ஏற்படுவதாக கூறப்படுகிறது.


மேலும் சில அறிக்கைகளின்படி, இது வாழ்நாள் முழுக்க பக்க விளைவுகளை ஏற்படுத்தும், அதாவது வீக்கமடைந்த விந்தணுக்கள் மற்றும் சில ஆண்களை மலட்டுத்தன்மையடைய செய்யும் என்று ஆய்வு முடிவுகள் எச்சரிக்கிறது. மால்டா காய்ச்சல் என்றும் அழைக்கப்படும் இந்த நோய் தலைவலி, தசை வலி, காய்ச்சல் மற்றும் சோர்வு ஆகியவற்றை ஏற்படுத்தும் என்று அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) தெரிவித்துள்ளது.

சிறிது காலம் கழித்து இந்த அறிகுறிகள் குறையக்கூடும் என்றாலும், சில அறிகுறிகள் நாள்பட்டதாக மாறக்கூடும். இந்த வைரஸ் தாக்கினால் சில உறுப்புகளில் வீக்கம் அல்லது மூட்டுவலி போன்ற நிரந்தர தாக்கம் ஏற்படும் என கூறுகின்றனர். இந்த நோய் மனிதர்களுக்கிடையில் பரவுவது மிகவும் அரிதானது என்றும், அசுத்தமான உணவை உட்கொள்வதன் மூலமாகவோ அல்லது பாக்டீரியாவை சுவாசிப்பதன் மூலமாகவோ தொற்று பரவுகிறது என தெரிவித்துள்ளனர்.

சி.என்.என் தொலைக்காட்சி தகவலின் படி, கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் ஜாங்மு லான்ஜோ உயிரியல் மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட கசிவால் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. விலங்குகளின் பயன்பாட்டிற்காக ப்ரூசெல்லா தடுப்பூசிகளை தயாரிக்கும் போது, தொழிற்சாலை காலாவதியான கிருமிநாசினிகள் மற்றும் சுத்திகரிப்பாளர்களை பயன்படுத்தியது.அதாவது கழிவு வாயுவில் அனைத்து பாக்டீரியாக்களும் முழுமையாக அழிக்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளது. ஆரம்பத்தில் ஒரு சிறிய எண்ணிக்கையிலான மக்கள் தொற்றுநோய்க்கு ஆளானார்கள். ஆனால் 21,000 பேரை பரிசோதித்ததில் தொற்றுநோய்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுவரை இந்த நோயால் எந்த இறப்பும் பதிவாகவில்லை. "இந்த எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட பெரியது, நோயின் பரவல் மற்றும் அதன் விளைவுகள் அனைவருக்கும் பரவலான கவலையை ஏற்படுத்தியுள்ளது" என்று சீன அரசு நடத்தும் குளோபல் டைம்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

 
First published: September 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading