Home /News /international /

இம்ரான் கானுக்கு ஆதரவாக திரண்ட ஆதரவாளர்கள் - இஸ்லாமாபாத்-ஐ கைப்பற்றுவோம் என முழக்கம்!

இம்ரான் கானுக்கு ஆதரவாக திரண்ட ஆதரவாளர்கள் - இஸ்லாமாபாத்-ஐ கைப்பற்றுவோம் என முழக்கம்!

இம்ரான் கான்

இம்ரான் கான்

Imran Khan : இம்ரான் கான் வீட்டை சூழ்ந்த அவரது கட்சியினர், இம்ரான் கானை கைது செய்தால், இஸ்லாமாபாத்தையே கைப்பற்றிவிடுவோம் என முழக்கமிட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi | Tamil Nadu
    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைதானதை அடுத்து அந்நாட்டில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கடந்த வாரம், இம்ரான் கான் நடத்திய பேரணி ஒன்றில் அவர் பேசிய கருத்துகளுக்காக, அவர் மீது தீவிரவாதி எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தீவிரவாதத்தை தூண்டும் வகையில் பேசியதாக கூறி அவர் மீது வழக்கு பதியப்பட்டது.

    இந்த தகவல் வெளியான உடனே, இம்ரான் கான் கட்சியினர் அவரது வீட்டை சூழ்ந்தனர். இம்ரான் கானை கைது செய்தால், இஸ்லாமாபாத்தையே கைப்பற்றிவிடுவோம் என்பது போன்ற முழக்கங்களை எழுப்பினர். 

    இந்நிலையில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம்,  அவருக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை முன் ஜாமீன் வழங்கியது. இம்ரான் கான் மீது போடப்பட்ட வழக்கில், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் நீதிபதி ஒருவரை அவர் மிரட்டியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அவர்களை பணி செய்யவிடாமல் மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இம்ரான் கான் வீட்டருகே குவிந்துள்ள தொண்டர்கள்


    இந்நிலையில் இம்ரான் கான் பேச்சுக்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் யூடியூபையும் தற்காலிகமாக முடக்கி வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

    இதற்கு முன் இம்ரான் கானின் கட்சியை சேர்ந்த ஷபாஸ் கில் தொலைகாட்சி நேரலை ஒன்றில், ராணுவ அதிகாரிகள் சட்டத்திற்கு புறம்பாக கொடுக்கும் உத்தரவுகளை ஏற்காதீர்கள் என பேசியுள்ளார். இதனை அடிப்படையாக கொண்டு அவர் மீது தேசவிரோத வழக்கு பதியப்பட்டது. அதை ஒளிபரப்பிய செய்தி தொலைக்காட்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Imran khan, Pakistan News in Tamil

    அடுத்த செய்தி