வாட்ஸ்அப் கால், வீடியோ பதிவேற்ற வரி... கொதித்தெழுந்த மக்கள்...!

ஒவ்வொரு அழைப்புக்கும் 0.20 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.14) வரி விதிப்பதாக அறிவித்தது. மேலும், சமூக வலைதள கணக்குகளில் வீடியோ பதிவிடவும் கட்டணம் என்று அறிவிக்கப்பட்டது.

வாட்ஸ்அப் கால், வீடியோ பதிவேற்ற வரி... கொதித்தெழுந்த மக்கள்...!
போராடும் மக்கள்
  • News18
  • Last Updated: October 20, 2019, 3:24 PM IST
  • Share this:
வாட்ஸ் அப், பேஸ்புக் மெசேஞ்சர் ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளப்படும் அழைப்புகள், சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட ஆகியவற்றுக்கு லெபனான் அரசு கட்டணம் விதிக்க, மக்கள் சாலையில் திரண்டு போராடி வருகின்றனர்.

லெபனான் நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால், அந்த நாட்டு அரசு, வரி வருவாயை பெருக்கும் நோக்கத்தில், வாட்ஸ் அப், பேஸ்புக் மெசஞ்சர், ஆப்பிள் பேஸ்டைம் ஆகியவற்றை பயன்படுத்திப்பேசக்கூடிய அழைப்புகளுக்கு வரி விதிக்க அதிரடியாக முடிவு செய்தது. ஒவ்வொரு அழைப்புக்கும் 0.20 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.14) வரி விதிப்பதாக அறிவித்தது. மேலும், சமூக வலைதள கணக்குகளில் வீடியோ பதிவிடவும் கட்டணம் என்று அறிவிக்கப்பட்டது.

அரசின் இந்த அறிவிப்பை கேட்டு கொந்தளித்த மக்கள் வீதியில் திரண்டனர். கடந்த 2 நாட்களாக பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் கூடி அரசாங்கம் பதவி விலகக்கோரி கோ‌‌ஷங்களை முழங்கினார்கள். பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படைகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடித்து போராட்டக்காரர்களை விரட்டியடிக்கிற அளவுக்கு நிலைமை மோசமானது. இந்த மோதல்களில் பலர் படுகாயம் அடைந்தனர்.


நிலைமை மோசமாவதை உணர்ந்த அரசு அடிபணிந்தது. வாட்ஸ் அப், பேஸ்புக் மெசஞ்சர், ஆப்பிள் பேஸ்டைம் அழைப்புகளுக்கு விதித்த வரி விதிப்பை வாபஸ் பெறுவதாக அறிவித்தது. எனினும், ஏ.டி.எம்களில் பணம் இல்லாதது, பெட்ரோல், உணவு ஆகியற்றுக்கு தட்டுப்பாடு என்று பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் தொடர்வதால் அரசு விழி பிதுங்கி வருகிறது.

First published: October 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்