Home /News /international /

பற்றி எரிகிறது ஐரோப்பா.. ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

பற்றி எரிகிறது ஐரோப்பா.. ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

ஐரோப்பாவில் காட்டுத்தீ.

ஐரோப்பாவில் காட்டுத்தீ.

ஐரோப்பாவில் வேகமாகப் பரவி வரும் இந்த தீயால், பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. போர்ச்சுகலில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் காட்டுத்தீயால் 659 பேர் இறந்துள்ளனர்.

    சமீபத்தில் ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் அங்குப் பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தீ தற்போது போர்ச்சுகல், ஸ்பெயின், பிரான்ஸ், கிரீஸ் மற்றும் மொராக்கோ போன்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது.

    ஏற்கனவே போர்ச்சுகலில் கடந்த ஜூன் மாத இறுதியிலேயே அதன் நில பரப்பில் 96 சதவீதம் வறட்சியில் இருப்பதாகச் செய்திகள் வந்தன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் காட்டுத்தீயால் 659 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில் அதிகபட்சம் முதியவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

    ஸ்பெயினில் சுமார் 30 இடங்களில் தீ இதுவரை பரவியுள்ளது. சுமார் ஒரு வாரமாக அங்கு வெப்பம் அதிகமாகவே இருந்து வந்தது. இப்போது அங்கு சுமார் 45.7 டிகிரி வெப்பம் நிலவி வருகிறது எனவும், இன்னும் ஒரு வாரத்திற்கு இந்த நிலையே தொடரலாம் எனவும் அந்நாட்டு தேசிய வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.

    பிரான்ஸில் சுமார் 27,000 ஏக்கருக்கு இந்த காட்டுத்தீ பரவியுள்ளது. இதுவரை 14,000 மக்கள் அவர்களின் குடியிருப்புகளை விட்டு அகற்றியுள்ளதாகவும், 1200 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க செயல்பட்டு வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

    கிரீஸில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 71 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதற்காக நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க செயல்பட்டு வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

    உலகம் வேகமாக வெப்பமாகி வருவதாகவும், இந்த நிலை தொடர்ந்தால் 2030 முதல் ஒரு வருடத்திற்கு சுமார் 2,50,000 மக்கள் உயிரிழப்பார்கள் என உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: Fire accident, Forest

    அடுத்த செய்தி