இலவச வைஃபைக்கான பாஸ்வோர்டை கண்டறிய உணவகம் வைத்த சவால்!

Free wifi

இலவச வைஃபை பயன்படுத்த வேண்டுமானால் இந்த புதிரை கண்டுபிடியுங்க என உணவகம் ஒன்று சவால் விடுத்துள்ளது.

  • Share this:
டிஜிட்டல் யுகமாக மாறிவிட்ட இந்த காலத்தில் இணையதளம் இன்றி எதுவும் கிடையாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. உணவு சாப்பிடுவதில் தொடங்கி காய்கறி வாங்கும் வரை அனைத்துமே இணையதளம் மூலமே நடைபெறுகிறது. இது அனைத்துக்குமே இணையம் தான் வாசல்படி. இந்த இணையத்தை பயன்படுத்த இலவசமாக வைஃபை கிடைக்கிறதென்றால் வேறென்ன வேண்டும்..

ஹோட்டல்கள் போன்ற மக்கள் கூடும் சில வணிக நிறுவனங்கள் இலவச வைஃபை சேவையை தருகின்றன.

ஆனால், இலவச வைஃபை தரும் ரெஸ்டாரண்ட் ஒன்று பாஸ்வோர்டை கண்டுபிடிக்க நூதன முறையை கையாண்டு, புதிர் ஒன்றை வைத்திருக்கிறது.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் சான் ஆண்டோரியோ எனும் பகுதியில் உள்ள யாயாஸ் தாய் ரெஸ்டாரண்ட் என்ற உணவகத்தில் இலவச வைஃபை சேவை கிடைக்கிறது. அந்த ரெஸ்டாரண்டுக்கு செல்வோர் அங்குள்ள வைஃபையை பயன்படுத்த அதற்கான பாஸ்வோர்டை சுவரில் எழுதி வைத்திருக்கின்றனர். ஆனால் அது நேரடியான பாஸ்வோர்ட் கிடையாது. அங்கு பாஸ்வோர்டை புதிர் போல எழுதி வைத்திருக்கின்றனர். இந்த பாஸ்வோர்டை கணித மேதைகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்ற வகையில் அவர்கள் சவாலை வைத்திருக்கின்றனர்.

Also Read:  உன் மனைவியுடன் உல்லாசம் அனுபவிக்க வேண்டும் என கேட்ட முதியவர்: அடுத்து நடந்தது என்ன?

கணித வினா ஒன்று அந்த சுவற்றில் எழுதப்பட்டிருக்கிறது. இதற்கான விடை தான் அந்த வைஃபை பாஸ்வோர்ட். உங்களால் இந்த கணித வினாவுக்கு விடை தேட முடிந்தால் தான் இணையத்தை பயன்படுத்த முடியும். நூதன முறையில் வாடிக்கையாளர்களிடையே சவால் விடுத்த இந்த உணவகத்தின் வைஃபையை பயன்படுத்துவதைக் காட்டிலும் அந்த கணித வினாவுக்கு விடையளித்து தங்களை ஒரு கணித மேதை என நிரூபிப்பதற்காகவே பலரும் அங்கு சென்று முயற்சி செய்து வருகின்றனர்.

Also Read: சாதி வன்ம பேச்சு: சட்டீஸ்கர் முதலமைச்சரின் தந்தை கைது!

சமூக வலைத்தளத்திலும் இந்த நூதன ரெஸ்டாரண்ட் பிரபலமடைந்துள்ளது. வாடிக்கையாளர்கள் பலரையும் ஈர்த்து வருகிறது. அதே நேரத்தில் நமக்கெல்லாம் கணிதத்தில் ஒன்றுமே தெரியாது என்பவர்கள் ஓரமாக செல்ல வேண்டியது தான்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Arun
First published: