அன்லிமிடெட் விடுமுறைகள் ஊதியத்துடன் வழங்கப்படும்...திறமையான பணியாளர்களை ஈர்க்க புது ஐடியா!

பெர்சனல் வாழ்க்கை இருப்பதைக் கூட யோசிக்காமல் மணிக்கணக்கில் பணியாற்றினால் வாரத்துக்கு நான்கு நாட்கள் கட்டாய விடுப்பு அளிக்கிறாராம் சிஇஓ டீன் ஹால்.

அன்லிமிடெட் விடுமுறைகள் ஊதியத்துடன் வழங்கப்படும்...திறமையான பணியாளர்களை ஈர்க்க புது ஐடியா!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: December 3, 2019, 8:55 PM IST
  • Share this:
திறமையான பணியாளர்களை ஈர்க்க ஊதியத்துடனான அன்லிமிடெட் விடுமுறைகள் வழங்கப்படும் என நியூசிலாந்து நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.

அன்லிமிடெட் விடுமுறைகள், அன்லிமிடெட் பிணி விடுப்புகள் என அத்தனையும் ஊதியத்துடனே வழங்கப்படும் என நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கேமிங் நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. இதன் மூலம் திறமையான பணியாளர்கள் மட்டும் கிடைத்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கேமிங் நிறுவனமான ராக்கெட்வொர்க்ஸ் சிஇஓ டீன் ஹால் கூறுகையில், “ஒரு 30 பேரை நம்பி 30 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள ஒரு ப்ராஜெக்ட்டை தருகிறோம். அப்படியென்றால் அவ்வளவு பெரிய பொறுப்பை சுமக்கக்கூடியவர்கள் தங்களது கால நேரத்தை முறையாக நிர்ணயித்து பணியாற்றுவர்கள் என்றே நான் நம்புகிறேன்” என்றுள்ளார்.


கேமிங் நிறுவனத்தில் பலர் குடும்பம், பெர்சனல் வாழ்க்கை இருப்பதைக் கூட யோசிக்காமல் மணிக்கணக்கில் பணியாற்றினால் வாரத்துக்கு நான்கு நாட்கள் கட்டாய விடுப்பு அளிக்கிறாராம் சிஇஓ டீன் ஹால். மேலும் இவர் கூறுகையில், “அதிக விடுமுறை எடுப்பதால் ஒரு பணியாளரின் திறமையை என்றுமே குறைத்து மதிப்பிடக்கூடாது. திறமை வேறு விடுமுறைகள் எடுப்பது வேறு” எனப் பேசியுள்ளார்.

மேலும் பார்க்க: ரோஹிங்கியா குழந்தைகளுக்கு மறுக்கப்படும் கல்வி... மனித உரிமை கண்காணிப்பகம் கண்டனம்!
First published: December 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்