சிறப்பான உணவுகள் எங்கிருக்கிறதோ அந்த இடத்தை தேடி அது நம்மை வரவழைக்கும். குறிப்பாக 'ஃபூடி' (foodie) என்று அழைக்கப்படும் உணவு பிரியர்களுக்கு உணவு என்று எழுதி வைத்தாலே அந்த இடத்ததில் உள்ள பிரபலமான உணவுகளை சாப்பிட்டு விடுவார்கள். சிலர் குறிப்பிட்ட நாடுகளின் உணவுகளை மட்டுமே ருசி பார்க்க நினைப்பார்கள். இப்படிப்பட்ட உணவு தேடல் கொண்ட அற்புதமான ஒருவரை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
டேவிட் ஆர் சான் என்பவர் லாஸ் ஏஞ்சல்சில் வாழ்ந்து வரும் சீன அமெரிக்கர். இவர் பல ஆண்டுகளாக பாரம்பரிய சீன உணவுகளை தேடி தேடி சாப்பிட்டு வருகிறார். இதுவரையில் சுமார் 8000 உணவகங்களில் இவர் சாப்பிட்டுள்ளார். இவர் ஒரு ஓய்வு பெற்ற வரி வழக்கறிஞர் ஆவார். இவரின் குடும்பத்தில் இவர் மூன்றாம் தலைமுறை சீன அமெரிக்கர். இவர் கல்லூரி மாணவராக இருந்தபோது, அமெரிக்க சிவில் உரிமைகள் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார் மற்றும் அவரது பாரம்பரியத்தை பற்றி ஆராய விரும்பினார்.
சீன உணவுகளின் மீது இவருக்கு இருந்த தீராத தேடலின் காரணத்தால் 1960 ஆம் ஆண்டுகளில் இருந்தே பாரம்பரியமான சிறந்த சீன உணவுகளை தேட தொடங்கினார். இவர் சுவைத்த 8000 உணவகங்களை பற்றிய அனுபவத்தை ஒரு எக்ஸெல் ஷீட்டில் தெளிவாக குறிப்பு எழுதி வைத்து வருகிறார். சீன அமெரிக்கராக இவர் இருந்தாலும், இவருக்கு சாப்ஸ்டிக்கை சரியாக பயன்படுத்த தெரியாதாம்.
சானின் சிறிய வயதில் இருந்தே அமெரிக்காவில் வாழ்ந்து வந்ததால் சீன உணவுகளின் மீது பெரிய அளவில் நாட்டம் வரவில்லை. முதன்முதலில் 1950'களில் தான் இவர் சீன உணவை சுவைத்துள்ளார். ஆனால் அவருக்கு அது பிடிக்கவில்லை. வெறும் சாதத்தில் சோயா சாஸ் சேர்த்துள்ளனர், வேறு ஒன்றும் அதில் சிறப்பில்லை" என்று அதை பற்றி குறிப்பிடுகிறார். மேலும் அலுவல் ரீதியாக அமெரிக்கா, கனடா, ஆசியா போன்ற நாடுகளுக்கு பயணம் செல்லும்போதும் சீன உணவுகளை சிறிது சாம்பிள் பார்ப்பேன் என்று சான் கூறுகிறார்.
ALSO READ | உறவுகளின் உன்னதம் உணர்த்தும் தவளை - வைரலாகும் வீடியோ
நாம் யூடியூபில் பார்ப்பது போன்று உணவுகளை ரிவியூவ் செய்வபர் இவர் கிடையாது. இவர் ஒரு பெரிய உணவு பிரியரும் கிடையாது. டீயில் காஃபின் உள்ளதால் அதையும் தவிர்த்து வருகிறார். மேலும் குறைவான கொலஸ்ட்ரால் மற்றும் குறைவான சர்க்கரை உள்ள உணவுகளை தான் இவர் பெரும்பாலும் சாப்பிட்டு வருகிறார். இவருக்கென்று இன்ஸ்டாகிராமில் ஒரு பேஜ் வைத்துள்ளார். 'David R. Chan' என்று இன்ஸ்டாவில் நீங்கள் இவரை பற்றி மேலும் பல விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
View this post on Instagram
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பன்றி இறைச்சி முதல் டீ ஸ்மோக் செய்யப்பட்ட வாத்து மற்றும் அன்னாச்சி பன்கள் வரை ஏராளாமான உணவுகள் பற்றி இந்த 'உணவு கலெக்டர்' பதிவிட்டுள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸில் சிறந்த பாரம்பரிய சீன உணவுகளை சாப்பிட சான் கேப்ரியல் பள்ளத்தாக்கை இவர் பரிந்துரை செய்கிறார். இவர் சுவைத்த உணவுகளை பற்றி தனது பிளாகிலும் எழுதி வருகிறார். இவரது மோசமான உணவக அனுபவம் என்பது, வடக்கு டகோட்டாவில் உள்ள பார்கோ உணவகம் என்று டேவிட் சான் குறிப்பிடுகிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: China, Restaurant