முகப்பு /செய்தி /உலகம் / நீல நிறத்தில் ஒளிர்ந்த வானம் - உலகின் கடைசி நாள் என்று கிளம்பிய புரளி

நீல நிறத்தில் ஒளிர்ந்த வானம் - உலகின் கடைசி நாள் என்று கிளம்பிய புரளி

நீல நிறத்தில் வானம் (Photo: Ken Ferrante)

நீல நிறத்தில் வானம் (Photo: Ken Ferrante)

வேற்று கிரக வாசிகள் வந்து விட்டதாக சிலர் ஆரம்பிக்க, இன்றே உலகின் கடைசி நாள் அதனை உணர்த்தும் விதமாக ஏற்பட்ட வெளிச்சமே இது என்று பல விதமாக புரளிகளை அள்ளி விட்டனர்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

நியூயார்க் நகரில் மின்சார நிலையத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக நீல நிறத்தில் அதீத வெளிச்சம் கிளம்பிய நிலையில், உலகின் கடைசி நாளுக்கான அறிகுறி என்று புரளிகள் கிளம்பின.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வானத்தில் திடீரென நீல நிறத்தில் அதீத வெளிச்சம் தோன்றியது. சில மணி நேரத்துக்கு இந்த வெளிச்சம் நீடித்தது. வெளிச்சம் ஏற்பட்டதற்கான காரணம் விளங்காத நிலையில், இந்த புகைப்படங்களை வைத்து சமூக ஊடகங்களில் விதவிதமாக புரளிகள் கிளம்பத்தொடங்கின.

வேற்று கிரக வாசிகள் வந்து விட்டதாக சிலர் ஆரம்பிக்க, இன்றே உலகின் கடைசி நாள் அதனை உணர்த்தும் விதமாக ஏற்பட்ட வெளிச்சமே இது என்று பல விதமாக புரளிகளை அள்ளி விட்டனர். சீரியஸாக பேசுகிறார்களா? விளையாட்டாக கூறுகிறார்களா? என்று பலர் புரியாமல் தலையை சொறிந்தனர்.

திடீர் வெளிச்சத்தை முன்வைத்து விவாதம் போவதை அறிந்துகொண்ட நியூயார்க் போலீசார், “மின் நிலையத்தில் ஏற்பட்ட சிறிய விபத்தே வெளிச்சத்துக்கான காரணம்” என்று புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

Also See..

First published:

Tags: NewYork