Home /News /international /

2 அடி நீள பிறப்பு சான்றிதழுடன் உலகின் மிகமிக நீளமான பெயரை கொண்ட பெண்!

2 அடி நீள பிறப்பு சான்றிதழுடன் உலகின் மிகமிக நீளமான பெயரை கொண்ட பெண்!

உலகின் மிகமிக நீளமான பெயரை கொண்ட பெண்!

உலகின் மிகமிக நீளமான பெயரை கொண்ட பெண்!

டெக்சாஸை சேர்ந்த ஒரு தாய் புதிதாக பிறந்த தன் மக்களுக்கு வழக்கம் போல இருக்கும் பெயர்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய விரும்பவில்லை. மாறாக உலகிலேயே மிக நீளமான பெயரை தன் மகளுக்கு வைக்க வேண்டும் என்று விரும்பினார்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
ஒரு குழந்தை உலகிற்கு வருவதற்கு முன்னரே அதன் பெற்றோர்கள் ஆர்வமாகவும், உற்சாகமாகவும் அதற்கு பெயரை தேர்வு செய்து விடுகிறார்கள். ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைக்கு ஒரு தனித்துவமான பெயரை வைக்கவே விரும்புகிறார்கள். பல பெற்றோர்கள் தங்களுக்குப் பிடித்தமான விஷயங்கள், வண்ணங்கள் அல்லது இருப்பிடங்களை குறிக்கும் அல்லது நினைவூட்டும் வகையில் தங்கள் புதிய குழந்தைக்கு ஒரு தனித்துவமான பெயரை வைக்க தேடுவதும், வைப்பதும் ட்ரெண்டாக இருக்கிறது. பெயர் ஒருவரது அடையாளத்தின் மிக முக்கியமான பகுதியாக இருப்பதால் ஒருவருக்கு தனது பெயர் பிடிக்காவிட்டாலும் கூட அவர்கள் வாழ்நாள் முழுவதும் அதனுடன் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

ஒரு சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு விசித்திரமான வினோதமான பெயர்களை வைத்து விடுவார்கள். வழக்கத்திற்கு மாறான இது மாதிரியான பெயர்கள் பெரும்பாலும் புத்தகங்கள், காமிக்ஸ், திரைப்படங்கள் மற்றும் இசை போன்ற பாப் கலாச்சாரத்தால் பெற்றோர்களால் வைக்கப்படும். உலகையே ஆட்டிப்படைத்து வரும் கோவிட் தொற்றின் தீவிர தாக்கத்தின் போது ஒரு சில பெற்றோர் தங்களது புதிய குழந்தைக்கு கோவிட், கொரோனா, சானிட்டைஸ் உள்ளிட்ட பெயர்களை சூட்டியது பற்றியும் நாம் கேள்விப்பட்டோம் அல்லவா.

இது போன்ற நிகழ்வில் டெக்சாஸை சேர்ந்த ஒரு தாய் புதிதாக பிறந்த தன் மகளுக்கு வழக்கம் போல இருக்கும் பெயர்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய விரும்பவில்லை. மாறாக உலகிலேயே மிக நீளமான பெயரை தன் மகளுக்கு வைக்க வேண்டும் என்று விரும்பினார். இந்த தாயின் பெயர் சாண்ட்ரா வில்லியம்ஸ். நீளமான பெயர் என்பதை விட சாண்ட்ரா வில்லியம்ஸ் தனது குழந்தை மகளுக்கு மிக மிக மிக நீள பெயரை வைத்து தனித்துவத்தை பெற முடிவு செய்தார். சிறுமி பிறந்த போது, அவளது பிறப்பு சான்றிதழில் சாண்ட்ரா வில்லியம்ஸ் மற்றும் அவரது கணவர் இருவரும் சேர்ந்தே முடிவு செய்து குழந்தையின் பெயர் Rhoshandiatellyneshiaunneveshenk Koyaanisquatsiuth Williams என்று எழுதினார்கள்.

ஆனால் தாய் சாண்ட்ரா வில்லியம்ஸ் இந்த பெயரின் நீளம் போதவில்லை என்று கருதி உள்ளார். இதனை தொடர்ந்து சாண்ட்ரா வில்லியம்ஸ் மற்றும் அவரது கணவர் ஆகிய இருவரும் சேர்ந்து குழந்தை பிறந்த 3 வாரங்களுக்கு பிறகு பெயரில் திருத்தம் செய்தனர். அந்த திருத்தம் புதிய குழந்தையின் பெயரை 1,019 வார்த்தைகளாக (1,019 letters) நீட்டித்தது. 36-எழுத்து நடுப் பெயரும் (letter middle name) சேர்க்கப்பட்டது. இறுதியில் அந்த குழந்தையின் பெயர் என்னவென்று தெரியுமா.? சற்று பொறுமையாக படித்து பாருங்கள்..

"Rhoshandiatellyneshiaunneveshenkescianneshaimondrischlyndasaccarnae renquellenendrasamecashaunettethalemeicoleshiwhalhinive’onchellecaundenesheaalausondrilynnejeanetrimyranaekuesaundrilynnezekeriakenvaunetradevonneyavondalatarneskcaevontaepreonkeinesceellaviavelzadawnefriendsettajessicannelesciajoyvaelloydietteyvettesparklenesceaundrieaquenttaekatilyaevea’shauwneoraliaevaekizzieshiyjuanewandalecciannereneitheliapreciousnesceverroneccaloveliatyronevekacarrionnehenriettaescecleonpatrarutheliacharsalynnmeokcamonaeloiesalynnecsiannemerciadellesciaustillaparissalondonveshadenequamonecaalexetiozetiaquaniaenglaundneshiafrancethosharomeshaunnehawaineakowethauandavernellchishankcarlinaaddoneillesciachristondrafawndrealaotrelleoctavionnemiariasarahtashabnequckagailenaxeteshiataharadaponsadeloriakoentescacraigneckadellanierstellavonnemyiatangoneshiadianacorvettinagodtawndrashirlenescekilokoneyasharrontannamyantoniaaquinettesequioadaurilessiaquatandamerceddiamaebellecescajamesauwnneltomecapolotyoajohny aetheodoradilcyana Koyaanisquatsiuth Williams"...

ஆம் மேலே இருப்பது ABCD-யின் கலவை அல்ல, சாண்ட்ரா வில்லியம்ஸ் பெற்றெடுத்த மகளின் பெயர் தான் இது. 1055 எழுத்துக்களை கொண்ட உலகின் மிக நீளமான பெயராக இது சாதனை படைத்துள்ளது. இந்தப் புதிய பெயருடன் அந்த பெண் குழந்தையின் புதுப்பிக்கப்பட்ட பிறப்புச் சான்றிதழின் நீளம் 2 அடி ஆனது. மேலும் அந்த பெண் உலகின் மிகப்பெரிய பெயரை கொண்டவராக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளார். இவ்வளவு நீளமான பெயரை கண்டு அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள்.

  

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரேயின் நிகழ்ச்சியில் சமீபத்தில் தோன்றிய தாய்-மகள் இருவரும் இந்த நீண்ட பெயரை பற்றி பேசினர். இதனிடையே, 'உலக சாதனையில் இடம் பிடிக்க வேண்டுமென்றே எண்ணத்துடன் வேண்டுமென்றே தான் எனது மகளுக்கு இப்படிப்பட்ட மிக நீளமான பெயரை வைத்தேன்.

 என் குழந்தையின் பெயர் இதுவரை இல்லாத அளவு மிக வித்தியாசமாக இருக்க வேண்டும் என்றும் நான் விரும்பினேன்' என்றார். இதற்கிடையில் சிறுமி தனது நீண்ட பெயரை இந்த ஷோவில் எளிதாக வெளிப்படுத்திய போது பார்த்து கொண்டிருந்த மக்கள் திகைத்து போனார்கள்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Woman

அடுத்த செய்தி