ஹோம் /நியூஸ் /உலகம் /

என்னது... வண்டியை விட வண்டி பெர்மிட் விலை அதிகமா? எங்கே? ஏன் இந்த விதி?

என்னது... வண்டியை விட வண்டி பெர்மிட் விலை அதிகமா? எங்கே? ஏன் இந்த விதி?

வண்டியை விட வண்டி பெர்மிட் விலை அதிகமா?

வண்டியை விட வண்டி பெர்மிட் விலை அதிகமா?

தற்போதைய நிலையில், S$5,000 மதிப்புள்ள மோட்டார் சைக்கிளை சொந்தமாக வைத்து ஓட்டுவதற்கு கிட்டத்தட்ட S$20,000 கட்டணம் செலுத்த வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

உலகின் மிக விலையுயர்ந்த நகரங்களில் ஒன்றான சிங்கப்பூரின்  வாகன அனுமதி சீட்டின் விலை வண்டியின் விலையை விட பன்மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

நிலப் போக்குவரத்து ஆணையத்தின் தரவுகளின்படி, சிங்கப்பூர் நகரத்தில் 10 வருட மோட்டார் சைக்கிள் அனுமதிச் சீட்டின் விலை பட்டியலில் இந்த மாதம் மட்டும் சுமார் S$12,801 ($8,984) பெற்று புதிய சாதனையை எட்டியுள்ளது. இது நான்கு ஆண்டுகளின் சராசரியை விட 200% அதிகமாகும். தென்கிழக்கு ஆசிய நாட்டில் வாங்கும் ஒரு பைக்கின் விலையை விட இந்த புதிய நுழைவுச் செலவு அதிகமாக உள்ளது.

சாலையில் உள்ள மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் விதமாக, உரிமைச் சான்றிதழ்கள் எனப்படும் அனுமதி சீட்டின் விலையை சிங்கப்பூர் அரசு ஏற்றியுள்ளது. செப்டம்பர் மாத நிலவரப்படி, நகரம் சுமார் 142,000 மோட்டார் சைக்கிள்களைக் கொண்டுள்ளது. கார்களின் எண்ணிக்கை சுமார் 650,000 ஆக உள்ளது

இங்கிலாந்து பிரதமர் ரிஷியை சொந்தம் கொண்டாடும் இந்தியா - பாகிஸ்தான்! காரணம் என்ன ?

தற்போதைய நிலையில், S$5,000 மதிப்புள்ள மோட்டார் சைக்கிளை சொந்தமாக வைத்து ஓட்டுவதற்கு கிட்டத்தட்ட S$20,000 கட்டணம் செலுத்த வேண்டும். ஏற்கனவே உள்ள அனுமதி சீட்டைப் புதுப்பிப்பதற்கு S$11,000-க்கும் அதிகமாக செலவாகிறது. இந்த கட்டண அளவு புதிய சீட்டின் கட்டணத்தை விடக் குறைவு, என்றாலும் 10 ஆண்டுகளுக்கு முந்தைய விலையை விட கிட்டத்தட்ட ஆறு மடங்கு இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பைக் வைத்திருப்பவர்கள் உயர்த்தப்பட்ட கட்டணத்தை நேரடியாகச் செலுத்த வேண்டும். வாடகைக்கு வண்டி எடுப்பவர்களுக்கு அவர்கள் கட்டணம் உயரும். பல டெலிவரி ஓட்டுநர்கள் தங்களுடைய வாகனங்களை ஒரு சுயாதீன ஆபரேட்டரிடமிருந்து அல்லது உணவு விநியோக நிறுவனத்திடமிருந்து வாடகைக்கு எடுக்கின்றனர்.

சிங்கப்பூரில் உள்ள பல மோட்டார் சைக்கிள் குத்தகை நிறுவனங்கள், அதிக அனுமதிச் செலவை ஈடுகட்ட கட்டண உயர்வை பரிசீலித்து வருகின்றன. GigaRider, என்ற நிறுவனம் அதன் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு 2023 முதல் காலாண்டில் 10% வாடகையை உயர்த்த வாய்ப்புள்ளது என்று கூறியது.

தீ விபத்தில் சிக்கும் மின்சார வாகனங்கள்.. இன்சூரன்ஸ் பாலிசி கட்டாயம்? - அரசிடம் பதில் கேட்கும் டெல்லி உயர்நீதிமன்றம்!

சிங்கப்பூர் மோட்டார் சைக்கிள்களை மட்டும் குறிவைக்கவில்லை. நிலப்பற்றாக்குறை உள்ள நாடு சாலையில் கார்களையம் குறைக்க முயற்சிக்கிறது. நுழைவு நிலை கார்களுக்கான அனுமதி சீட்டுகள் கூட இப்போது S$80,000க்கு மேல் உள்ளது. இது 2018ல் கிட்டத்தட்ட மூன்று மடங்காகும்.

அதிக விலைகள் குடியிருப்பாளர்களிடையே ஏற்கனவே விரிவடைந்து வரும் சமத்துவமின்மையை அதிகரிக்கும். ஆனால். பல குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்களுக்கு, ஒரு மோட்டார் சைக்கிள் என்பது வேலை அல்லது குடும்பப் பொறுப்புகளை சந்திப்பதற்கான குறைந்த செலவில் கிடைக்கும் வழியாக இருந்தது. அது இப்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Bike, Car, Singapore