நம்பவே முடியாத ஒரு விநோத விபத்து...! காரை பதம் பார்த்த சைக்கிள்

சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள ஷென்ஷென் என்ற நகரில்தான் இந்த வினோத விபத்து நடந்துள்ளது.

Web Desk | news18
Updated: January 5, 2019, 7:33 AM IST
நம்பவே முடியாத ஒரு விநோத விபத்து...! காரை பதம் பார்த்த சைக்கிள்
இணையத்தில் வைரலான படம்
Web Desk | news18
Updated: January 5, 2019, 7:33 AM IST
சீனாவில் சைக்கிள் மோதியதில் கார் ஒன்று சேதமடைந்த சம்பவம் நடந்துள்ளது. அதன் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

சமீபத்தில் சைக்கிள் ஒன்று கார் மீது மோதி, காரின் முன்பகுதி பலத்த சேதத்தை அடைந்தது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வந்தது. பலரும் இந்த புகைப்படங்களை பகிர்ந்து வந்தனர்.

எனினும், “சைக்கிள் மோதி கார் சேதமாகுமா?.. என்ன பித்தலாட்டம் இது” என்று நம்ப மறுத்ததோடு, அந்த புகைப்படங்கள் போலியானவை என்று கருத்து தெரிவித்தனர். ஆனால், அந்த செய்தி பொய்யானது அல்ல நிஜமே என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள ஷென்ஷென் என்ற நகரில்தான் இந்த வினோத விபத்து நடந்துள்ளது. கார் மீது சைக்கிள் மோதியதாகவும் இதில் காரின் முன்பகுதி சேதம் அடைந்துள்ளதாகவும் அப்பகுதி போலீசார் குறிப்பிட்டுள்ளனர். இந்த விபத்தில் சைக்கிளுக்கு எதுவுமே ஆகவில்லை என்பதுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
Loading...


Also See...

First published: January 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...