• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • வெறும் 239 மணி நேரத்தில் கண்டம் விட்டு கண்டம் பறந்து சென்று சாதனை படைத்த பறவை!

வெறும் 239 மணி நேரத்தில் கண்டம் விட்டு கண்டம் பறந்து சென்று சாதனை படைத்த பறவை!

4BBRW Fighter Jet bird

4BBRW Fighter Jet bird

4BBRW என்ற பெயர் கொண்ட பறவை வட அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு பறந்து சென்று அற்புத சாதனையை படைத்துள்ளது.

  • Share this:
மனிதர்கள் பல விதமான சாதனைகளை செய்து வருவது வழக்கம் தான். ஆனால் விலங்குகள், பறவைகள், பூச்சிகள் போன்றவை செய்து வரும் சாதனை நம்மை நிச்சயம் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். நம் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு பயிற்சி அளித்து அவற்றை கின்னஸ் சாதனை மாதிரியான உலக சாதனைகளை பலர் செய்து வருகின்றனர். இதுவே எந்தவொரு பயிற்சியும் தராத சாதாரண பறவை உலக சாதனை செய்தால் கண்டிப்பாக நாம் எல்லோரும் வாய்பிளந்து பார்ப்போம்.

அதுவும் இந்த பறவை ஒரு கண்டத்தை விட்டு இன்னொரு கண்டத்திற்கு பறந்து சென்று புதிதான ஒரு சாதனையை செய்துள்ளது. 4BBRW என்ற பெயர் கொண்ட பறவை வட அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு பறந்து சென்று அற்புத சாதனையை படைத்துள்ளது. சுமார் 13 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவை வெறும் 239 மணி நேரத்திலே இப்பறவை பறந்து சென்றுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி அலாஸ்காவில் இருந்து புறப்பட்டு செப்டம்பர் 27 ஆம் தேதி ஆஸ்திரேலியாவை இப்பறவை அடைந்துள்ளது. இது எவ்வளவு வேகத்தில் பறந்திருந்தால் இவ்வளவு தொலைவை வெறும் 10 நாட்களிலே கடந்திருக்கும் என்பதை நினைத்து பாருங்கள். இதன் ஜெட் வேகத்தை வைத்தே இதற்கு ஜெட் ஃபைட்டர் பறவை என்கிற பெயரும் உண்டு. இதை காட்விட் (Godwit) என்றும் அழைக்கின்றனர்.

Also read:   மொபைலில் சத்தமாக பாட்டு கேட்கும் பயணிகளை பேருந்தை விட்டு இறக்கிவிடலாம் - உயர்நீதிமன்றம் அதிரடி

இதற்கு முன்னர் இந்த ஜெட் ஃபைட்டர் பறவை வேறொரு சாதனையையும் செய்துள்ளது. அலாஸ்காவில் இருந்து நியூசிலாந்து வரை குறுகிய நேரத்தில் பறந்து இது சாதனை செய்துள்ளது. இப்பறவை முன்னர் செய்த அதன் சாதனையையே இம்முறை அது முறியடித்துள்ளது. இந்த பறவையின் எடை 400 கிராம் ஆகும். இது பூச்சிகளை அதிகம் வேட்டையாடி உண்ணும். இதன்மூலம் தான் பயணத்தின்போது தனது பசியை தீர்த்து கொள்கிறது.

இந்த ஜெட் ஃபைட்டர் பறவையின் உடல் வடிவம் அதிக வேகத்தில் பறக்கும்படி உள்ளது. இதன் உதவியுடன் தான் இது சிறப்பான வேகத்தில் பறக்கிறது. இந்த வகையான பறவைகள் அலாஸ்காவில் மட்டுமே காணப்படுகின்றன. வெயில் காலங்களில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இடங்களுக்கு இவை இடம்பெயர்ந்து சென்று வரும். இந்த வகை காட்விட் பறவைகள் 22 ஆண்டுகள் வரை உயிர் வாழும் என பறவை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Also read:   வீட்டில் தீ பற்றி எரிந்த போதும் தடுக்காமல் ஃபேஸ்புக் லைவ்வில் மதப்பிரச்சாரம் செய்த நபர்..

தற்போது இந்த பறவை ஆஸ்திரேலியாவில் இருந்து புறப்பட்டு டாஸ்மான் கடலை கடந்துள்ளது. சென்ற ஆண்டு 13 வயதான ஒரு பறவை செய்த சாதனையை இந்த 4BBRW பறவை முறியடித்து உள்ளது. சுமார் 7500 கிலோ மீட்டர் பறந்து சென்று இந்த சாதனையை இது செய்துள்ளது. உலகில் வாழும் பல்வேறு வகையான பறவைகள் அவ்வப்போது இடம்பெயர்வதற்காக பறந்து செல்லும். இந்த வகை ஜெட் ஃபைட்டர் பறவைகளும் குழுவாகவும், சில நேரங்களில் தனித்தும் இடம்பெயர்ப்புக்காக பறந்து செல்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

First published: